கத்தாரின் முதலீடு 5 மடங்கு உயர்வு.. கத்தாருக்கு சென்ற முதல் துணை கவர்னர் வெங்கையா நாயுடு..!

இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020 முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, இருப்பினும் அதன் உண்மையான வளர்ச்சி அளவீட்டை எட்டவில்லை என துணை கவர்னர் எம். வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கத்தாருக்கு வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு உள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதிகாரிகள் உடனான சந்திப்பில் கத்தார் முதலீட்டுக்கு இந்தியாவில் இருக்கும் வாய்ப்பை குறித்து பேசினார்.

அரபு நாடுகளில் இருந்து இந்தியா வர, இரட்டிப்பாகும் விமான கட்டணங்கள்: அதிர்ச்சி தகவல்

 வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

கத்தார் பயணத்தில் துணை கவர்னர் எம். வெங்கையா நாயுடு கத்தார் நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஹெச்.ஈ ஷேக் காலித் பின் அப்துல் அசிஸ் அல் தானி அவர்களை சந்தித்து பேசினார். மேலும் கத்தாருடன் வர்த்தக கூட்டுறவை உருவாக்க தனியார் நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதல் முறையாக

முதல் முறையாக

வெங்கையா நாயுடு கத்தார் நாட்டுக்கு முதல் முறையாக சென்ற இந்திய துணை கவர்னர் என்ற பெருமையை இந்த சந்திப்பு மூலம் பெற்றுள்ளார். மேலும் கத்தார் அரபு நாடுகளில் கல்விக்கு தலைமையிடமாக மாறி வருவதை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.

பார்மா துறை
 

பார்மா துறை

இந்தியாவில் இருந்து அதிகப்படியான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளத்தை கத்தாருக்கு விரிவாக்கம் செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் US FDA ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 800 மருந்துகள் கத்தார் நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் பயன்படும்.

எரிவாயு

எரிவாயு

இதேபோல் இந்தியாவின் 40 சதவீத இயற்கை எரிவாயு கத்தார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் பிற துறைகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வெங்கையா நாயுடு, ஹெச்.ஈ ஷேக் காலித் பின் அப்துல் அசிஸ் அல் தானி-யிடம் கேட்டுக்கொண்டார்.

நுபுர் சர்மா

நுபுர் சர்மா

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நுபுர் சர்மா சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நபிகளை இகழ்ந்து பேசினார், இதை தொடர்ந்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இவரின் பேச்சு அரபு நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

First-ever Vice President of India to visit Qatar; Qatar’s investment in India grows 5 times

First-ever Vice President of India to visit Qatar; Qatar’s investment in India grows 5 times

Story first published: Monday, June 6, 2022, 12:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.