காபி இயந்திரத்தின் டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் – என்ன காரணம் தெரியுமா ?

வாஷிங்டன்,

இத்தாலி நாட்டின் துரின் பகுதியில் 1851ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில்முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

19ம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. அப்போது காபியை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.

இதனை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை கொண்ட எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884ல் கண்டுபிடித்தார். இதனால் மக்கள் காபி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரம் மிச்சமானது.

பின்னர், 1885ம் ஆண்டு அக்டோபர் 23ல் பிரான்ஸின் பாரிஸில் எஸ்பிரெசோ இயந்திரதுக்கு ஏஞ்சலோ மோரியோண்டோ சர்வதேச காப்புரிமை பெற்றார். அதன் பிறகு இந்த இயந்திரம் உலகளவில் புகழ் பெற்றது.

அதை தொடர்ந்து ஏஞ்சலோ எஸ்பிரெசோ இயந்திரதின் “காட் ஃபாதர்” என அழைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று ஏஞ்சலோ மோரியோண்டோவின் 171-வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் அவருக்கு டூடுல் வெளியிட்டு வெளியிட்டு சிறப்பித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.