உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த போரின் விளைவாக இருதரப்பிலும் பல்லாயிரகணக்கில் உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஷியா- உக்ரைன் போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இதனிடையே இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என் மூன்று பேருக்கு, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் கவலைக்கிடம்!

கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் எனவும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.