மாதத்தில் இரண்டு சனிக்கிழமை சென்னையில் தீவிர தூய்மை விழிப்புணர்வு முகாம்! மேயர் பிரியா அறிவிப்பு…

சென்னை: மாதத்தில் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு முகாம்  நடை பெறும்  என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று நகராட்சி நிர்வாக துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம்   மற்றும் நம் குப்பை நம் பொறுப்பு எனும் தலைப்பில் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு  கலந்துகொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு பேரணியில் பங்கேற்றும் கடற்கரை மணற்பரப்பில் மீது உள்ள குப்பைகளை முகாமை சிறப்பித்தனர். மேலும் நம் குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரித்து போட வேண்டும் போன்ற கருத்துக்களை முன்வைத்தும் பேரணியில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, முதல்வர் அறிவிப்பின்படி  மாதத்தில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு முகாம்  நடைபெறும். பொதுவாக பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் மேலும் வார்டுகள் சார்ந்து தேவைப்படும் இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம், ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டமாயினும் இடையில் விடுபட்ட காரனத்தால் மீன்டும் தொடங்கி உள்ளோம் என்றார்.

தொடர்ந்து செய்தியளார்களிடன் கேள்விக்கு பதில் அளித்தவர், கொரட்டூர் பகுதி ஏரியில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது என்ற பொது மக்கள் குற்றச்சாட்டுக்கு,  அப்பகுதி மாநகராட்சி கட்டுப்பாட்டில் வரும்  நிலப்பகுதி தான். ஆனால்,   ஆந்திராவில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் சிறிதளவு நீர் தேங்கி அவ்வாறு காட்சியளிக்கிறது. அங்கு ஆய்வு மேற்கொண்டோம் எந்தவிதமான விதி மீறல்களும் அங்கு நடைபெறவில்லை என்றார். வரும், செப்டம்பர்  மாதத்திற்குள் மழை நீர் கால்வாய் பணிகள் முடிவடையும் என தெரிவித்தவர்,

நெற்குன்றம் போன்ற பகுதிகளில் சாலை பணிக்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணி தோண்டப்பட்டு இரண்டு மாதங்களாக பணி நடைபெற உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  இதுபோன்ற புகார்கள் எங்களுக்கும் வந்தது உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் தற்போது இரண்டு நாட்களில் அந்த வேலைகள் முடிவடைந்து வருகிறது என்றார்.

மெரினா கடற்கரையில்  திறக்கப்படாமல் உள்ள மூன்று முதலுதவி சிகிச்சை மையங்கள் மீண்டும் தொடருமா என்ற கேள்விக்கு அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.