எல்ஐசி பங்கு முதலீட்டாளர்களே உஷார்.. இந்த வாரம் முழுவதும் திக் திக் நேரம் தான்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்டு மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் மூலம் சாதனைப்படைத்தாலும் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓ-வில் முக்கிய பங்கு வகித்த ஆங்கர் முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கலாமா.. இல்லை விற்பனை செய்யலாமா.. என்ற முக்கியமான முடிவை எடுக்கும் நாள் ஜூன் 13ஆம் தேதி.

எல்ஐசி ஐபிஓ ஆங்கர் முதலீட்டாளர்கள்

எல்ஐசி ஐபிஓ-வில் பெரும் தொகையை முதலீடு செய்த ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாள் லாக்-இன் காலம் திங்களன்று முடிவடைவதால், லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் (எல்ஐசி) பங்குகள் இந்த வாரம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். எல்ஐசி பங்குகள் ஏற்கனவே இக்காலாண்டின் மிகவும் குறைந்த விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கர் முதலீட்டாளர்கள்

ஆங்கர் முதலீட்டாளர்கள்

ஐபிஓ தொடங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ஒரு பங்கு விலை தலா 949 ரூபாய் வீதம் 59.3 மில்லியன் பங்குகளைக் கூட்டாக வாங்கிய ஆங்கர் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை திங்கள்கிழமை முதல் பங்குச் சந்தையில் விற்கலாம்.

9 நாள் தொடர் சரிவு
 

9 நாள் தொடர் சரிவு

கடந்த ஒன்பது வர்த்தக நாட்களில் எல்ஐசி பங்கு விலை குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 837 ரூபாயில் இருந்து 709.70 ரூபாய் வரையில் சரிந்தது. சந்தை ஆய்வாளர்கள் ஆங்கர் முதலீட்டாளர்களின் 0 நாள் லாக்-இன் காலம் திங்களன்று முடிவடைவதால் எல்ஐசி பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

 டிஸ்கவுன்ட் விலை

டிஸ்கவுன்ட் விலை

எல்ஐசி பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது தனது ஐபிஓ விலையான 949 ரூபாயில் பட்டியலிடப்படவில்லை, டிஸ்கவுன்ட் விலையான 875.45 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை வர்த்தக

திங்கட்கிழமை வர்த்தக

திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் 3.4 சதவீதம் வரையில் சரிந்து 681.70 ரூபாய் வரையில் சரிந்து வரலாற்று சரிவை பதிவு செய்தது. எல்ஐசி ஐபிஓ மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது ரீடைல் முதலீட்டாளர்கள் பிரிவில் வரும் சிறு முதலீட்டாளர்களும், பாலிசிதாரர்களும், எல்ஐசி ஊழியர்களும் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC shares 30-day lock-in period ends for anchor investor today june 13

LIC shares 30-day lock-in period ends for anchor investor today june 13 எல்ஐசி பங்கு முதலீட்டாளர்களே உஷார்.. இந்த வாரம் முழுவதும் திக் திக் நேரம் தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.