வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன? திருமண பந்தத்தில் துன்புறுத்தல் அனுபவித்ததாக கூறும் சக தமிழர்


சிங்கப்பூரில் காப்பகத்தில் பணிபுரிந்த தமிழ்ப்பெண் திருட்டு மற்றும் ஏமாற்றுதல் வழக்கில் சிக்கிய நிலையில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

லதா நாராயணன் (59) என்ற பெண் காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 65 வயதான முதியவரை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2019ல் அந்த முதியவரின் ஏ.டி.எம் கார்டை எடுத்து ரூ 2,58,579.80 (இலங்கை மதிப்பில்) பணத்தை திருடியதோடு, கார்டை பயன்படுத்தி உணவு பொருட்கள் மற்றும் கழிப்பறைக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

குறித்த முதியவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார் என நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர் கொடுத்த புகாரையடுத்தே பொலிசார் விசாரணையில் லதா கடந்த 2019ல் சிக்கினார்.

வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன? திருமண பந்தத்தில் துன்புறுத்தல் அனுபவித்ததாக கூறும் சக தமிழர்

istockphoto.com

அப்போது தான் லதா ஏற்கனவே கடந்த 2017ல் சொத்து தொடர்பான திருட்டில் சிக்கி நீதிமன்றம் மூலம் SGD 600 அபாரம் பெற்றிருக்கிறார் என தெரியவந்தது.
தற்போது அவர் செய்த குற்றத்திற்காக SGD 4,000 (இலங்கை மதிப்பில் ரூ 10,34,207.88) விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி பேசிய லதா தரப்பு வழக்கறிஞரான அஸ்வின் கணபதி, லதா தனது இளமை பருவத்தில் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளானதாகவும், தனது திருமண பந்தத்தில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

அதே போல காப்பகத்தில் லதா கவனித்துக்கொண்ட நபராலும் அவர் இன்னல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானார் என தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.