WhatsApp Business: வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்களுக்கு மிஸ்டு கால் அலெர்ட் அம்சம்!

WhatsApp Business Missed Call Feature: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை சிறப்பாகவும் எளிதாகவும் மாற்ற புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. சமீபகாலமாக வாட்ஸ்அப்பில் இதுபோன்ற பல அம்சங்கள் வந்துள்ளன.

இது தளத்தைப் பயன்படுத்தும் பயனர் அனுபவத்தை இரட்டிப்பாக்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில், வாட்ஸ்அப் புதிய செயலி அனுபவத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் தவறவிட்ட அழைப்புகளைப் பயனர்களுக்குத் தெரிவிக்கும்.

வாட்ஸ்அப் மிஸ்டு கால் அலர்ட் அம்சம் எப்படி இருக்கும், இதில் யார் பயனடைவார்கள் என்ற கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Nothing Note 1: நம்ம தமிழ்நாட்டில் தயாராகும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்!

இந்த பயனர்களுக்கு புதிய அம்சம் கிடைக்கும்

இந்த அம்சம் முதலில் வணிகப் பயனர்களுக்குக் கிடைக்கும். இது iOS அடிப்படையிலான இயங்குதளங்களுக்கானதாக இருக்கும். எனவே, iOS தவிர பிற பயனர்களுக்கு மிஸ்டு கால் அலர்ட் அம்சத்தை விரைவில் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POCO F4 5G: OIS கேமரா, 67W சார்ஜிங்; லிஸ்ட் ரொம்ப பெருசு – கசிந்த போக்கோ எஃப்4 விலை!

வாட்ஸ்அப்பின் புதிய மிஸ்டு கால் அலர்ட் அம்சம் புதிய வாட்ஸ்அப் பதிப்பை நிறுவியவர்களுக்கு வேலை செய்யும். வாட்ஸ்அப்பின் புதிய ஏபிஐ இந்த வாரம் அதை ஆதரிக்கத் தொடங்கும். மேலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய அம்சம் எப்போது வெளிவரும்?

வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு பயனர்கள் போனில் Do not disturb அம்சத்தை செயல்படுத்தும்போது, மிஸ்டு கால் அலர்ட் வசதி ஆக்டிவேட் ஆகும். வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் WABetaInfo இல் காணப்பட்டது. எனவே, பயனர்கள், தாங்கள் தவறவிட்ட வாடிக்கையாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

திருமணம் ஆன பெண்கள் Google-இல் என்ன தேடுகிறார்கள் – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

தவறிய அழைப்பு விவரங்கள்

WABetaInfo அறிக்கையின்படி, நீங்கள் வாட்ஸ்அப் அழைப்பைப் பெறும்போது, நீங்கள் அமைத்துள்ள தொந்தரவு செய்ய வேண்டாம் பயன்முறை முடக்கப்படும். தொடர்ந்து நீங்கள் ஒரு எச்சரிக்கையைப் பெறுவீர்கள். இது அழைப்பு வரலாற்றின் வலது பக்கத்தில் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

உங்கள் போன் ‘டு நாட் டிஸ்டர்ப்’ நிலையில் இருக்கும்போது, மிஸ்டு கால் அலெர்ட் வேலை செய்யும். மேலும், நிறுவனம் பல புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது.

அன்டூ பொத்தான், எடிட் டெக்ஸ்ட் மெசேஜ் ஆப்ஷன், டபுள் வெரிஃபிகேஷன் அம்சம் உள்ளிட்ட மூன்று புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சமீபத்தில் சோதனை செய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.