அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான்! பாரசீக வளைகுடாவில் பதற்றம்


பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படை படகுகள், அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரசீக வளைகுடா பகுதி வழியாக அரபிக்கடலில், அன்றாடம் பல கப்பல்கள் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்கின்றன.

இவ்வாறு செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் பயணம் மேற்கொள்கின்றன.

கப்பல்கள் கச்சா எண்ணெய் கொண்டு பயணிப்பதில், ஈரானுக்கு ஐந்தில் ஒரு பங்கு கிடைக்கிறது.

இந்த நிலையில், வழக்கம் போல் சில கப்பல்கள் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வளைகுடா பகுதியில் பயணித்தன.

அப்போது எதிர்பாராத விதமாக ஈரான் கடற்படையின் மூன்று படகுகள், ஸ்ரிட் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர்க்கப்பலை வேகமாக வந்து இடைமறித்தன.

அவற்றில் ஒரு படகு அமெரிக்க கப்பலை மோதுவது போல் விரைந்து வந்ததால், போர் கப்பலில் இருந்து எச்சரிக்கும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது.

இதனால் ஈரானிய கடற்படை படகு வேகமாக விலகி சென்றது.

ஈரான் இந்த சம்பவத்தை உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை.

உலக வல்லரசு நாடுகளுடன் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளதால், இந்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 

அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான்! பாரசீக வளைகுடாவில் பதற்றம்  

Photo Credit: AP

அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான்! பாரசீக வளைகுடாவில் பதற்றம்

Photo Credit: AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.