லங்கா ஐஓசி நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்! உடன் நடைமுறைக்கு வரும் மாற்றம்


லங்கா ஐ. ஓ சி. நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்  பெட்ரோல் விற்பனைக்கு  கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்படி,  வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, உந்துருளி, முச்சக்கரவண்டி, மகிழுந்து மற்றும் சிற்றூர்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

எரிபொருள் வழங்கப்படும் விபரங்கள்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்! உடன் நடைமுறைக்கு வரும்  மாற்றம் | Important Announcement Of Lanka Ioc

அதற்கமைய, உந்துருளிகளுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு அதிகபட்சமாக 2,500 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது. 

கார், ஜீப் மற்றும் சிற்றூர்திகளுக்கு அதிகபட்சம் 7,000 ரூபாவுக்கு  எரிபொருள் வழங்கப்படும் என  ஐஓசி  நிறுவனம் அறிவித்துள்ளது.  

எவ்வாறாயினும்,  வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள்  போன்றவற்றிற்கு இந்த வரையறை பொருந்தாது எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.