Sky Cruise: ஹஷேம் அல்-கைலி வடிவமைத்த ஸ்கை குரூஸ் விமான ஹோட்டல்

புதுடெல்லி: தரையிறங்காமல் பறக்கும் ஹோட்டலை பார்த்ததுண்டா? விரைவில் பார்க்கலாம். பறக்கும் ஹோட்டல் தொடர்பான வீடியோ வெளியானதுமே அது பஞ்சாய் பறந்து வைரலாகிறது.

ஹஷேம் அல்-கைலி வடிவமைத்த ஸ்கை க்ரூஸ், அணுசக்தியால் இயங்கும் எஞ்சின்களைக் கொண்ட விமான ஹோட்டல், இந்த ஹோட்டல் எப்போதும் வானத்திலேயே பறந்துக் கொண்டிருக்கும் என்பது முக்கியமான தகவல். அதாவது இது ஒருபோதும் தரையிறங்காது. இது போன்ற ஹோட்டல் உலகில் இதுதான் முதல் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒருபோதும் இறங்காத ஒரு ஹோட்டலின் செயல்பாட்டை விளக்கும் வீடியோ இணையவாசிகளுக்கு உற்சாகத்தை மட்டுமல்ல அது சாத்தியமா என பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. 

ஸ்கை க்ரூஸ் எனப்படும் இந்த விமான ஹோட்டலை ஹஷேம் அல்-கைலி வடிவமைத்துள்ளார். 5,000 பேர் தங்கக்கூடிய இந்த விமானத்தை இயக்குவது மனிதர்கள் அல்ல என்பதும் ஆச்சரியமூட்டும் விஷயம் ஆகும்.

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்த விமானத்தில் பைலட் இருக்க மாட்டார். அணுசக்தியில் இயங்கும் 20 என்ஜின்களைக் கொண்ட ஜம்போ விமானம், திட்டமிட்ட பயணக்காலம் முழுவதும் வானிலேயே பறந்துக் கொண்டிருக்கும். விமானத்தில் பழுது ஏதேனும் ஏற்பட்டால், அந்த பழுதுபார்ப்பு பணிகள் கூட வானிலேயே மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க: என்றுமே தரையிறங்காத விமான ஹோட்டல்

இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு 360 டிகிரி பார்வை, பொழுதுபோக்கு தளம், ஷாப்பிங் மால், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும்.

அதாவது ஒரு மெட்ரோ நகரில் இருக்கும் அனைத்து வசதிகளும் ஜம்போ விமான ஹோட்டலில் இருக்கும்.

விமான ஹோட்டல் என்று தனது பயணத்தைத் தொடங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. விமான ஹோட்டல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களும் அசத்தும் வீடியோவும் அனைவரின் ஆவலையும் தூண்டியுள்ளது. தொழில்நுட்ப அற்புதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க | பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு

வெளியாகியிருக்கும் இந்த விமான ஹோட்டல் வீடியோவில் காணும் தோற்றங்கள் அனைத்தும் அற்புதமான அதிசயங்களாக இருக்கின்றன.

நட்சத்திரங்கள் காமிக் ஏர்ஷிப்கள் நிஜத்தில் வருவது போல் தோன்றுகிறது. வைரலாகும் இந்த வீடியோவைப்  பார்த்தவர்களில் பெரும்பாலும் அறிவியல் அற்புதம் என்று பாராட்டு மழை பொழிந்தாலும், இந்த விமான ஹோட்டல் பணக்காரர்களுக்கானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

இந்த அற்புதமான விமான ஹோட்டலை வடிவமைத்துள்ள அல்-கைலி ஒரு யேமன் அறிவியல் தொடர்பாளர் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் ஆவார், அவர் அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய விளக்கப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமானவர். 

கடந்த சில வருடங்களில் கூட அறிவியல் செய்தி ஆதாரங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் பதிவுகளை பகிர்ந்தவர் அல்-கைலி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | விண்வெளியில் ஈரத்துணியைப் பிழிந்தால் என்னவாகும்? 

ஸ்கை குரூஸ் விமானம்,‘போக்குவரத்தின் எதிர்காலம்’ ஆக இருக்கலாம்.  செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சுயமான முதல் விமான போக்குவரத்து என்ற விதத்திலும் தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது ஸ்கை குரூஸ்.

இந்த ஹோட்டலில். வணிகம், பொழுதுபோக்கு மற்றும் திருமணங்கள் என அனைத்துவிதமான நிகழ்வுகளும் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற கருத்தாக்கத்திற்கு இந்த விமான ஹோட்டல் பொருத்தமாக இருக்கலாம். வித்தியாசமான இந்த ஹோட்டல் அதி பணக்காரர்களுக்கானது என்றாலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும், புத்தாக்க முயற்சிக்கும் இந்த விமான விடுதி முன்மாதிரியாக இருக்கிறது.

பிரமிப்பு மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த விமானம், வானத்தில் இருக்கும்போது என்னவாகும் என்ற கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர். 

மேலும் படிக்க | வாயேஜர் அனுப்பும் விசித்திரமான சிக்னல்களால் ஏற்படும் விஞ்ஞான குழப்பங்கள்

வானில் பறக்கும்போது ஸ்கை குரூஸ் செயலிழந்தால் என்ன செய்வது? என்றும், அதில் பயன்படுத்தப்படும் அணுசக்தி எஞ்சின்களால் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்றும் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர். 

தனது புது முயற்சிக்கான விமர்சனங்கள் மற்றும் அச்சத்தை புறம்தள்ளும் அல்-கைலி, எந்தவொரு புதிய முயற்சிக்கும் இதுபோன்ற எதிர்வினைகள் வருவது இயல்பானதே என்று கூறுகிறார். 

மூலக்கூறு உயிரியலாளராக இருக்கும் அவர் தனது தொழில்முறை ஈடுபாடுகள் தவிர, அறிவியல் புனைகதை குறும்படங்களையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மர்மமான புதிய துருவச் சுடர் விஞ்ஞானிகள் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.