லாப் எரிவாயு நிறுவனம் தற்போது வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்


லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவித்தல்

லாப் எரிவாயு நிறுவனம் தற்போது  வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல் | Laugfs Gas Company New Announcement

விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவானவற்றை தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் 1345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கோரியுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.