Tecno Spark 8P: இந்த விலைல 50MP கேமரா போனா! டெக் சந்தைக்குள் மாஸ் காட்டும் டெக்னோ!

Tecno Spark 8P Launch date: உங்களிடம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை பட்ஜெட் இருந்தால், நல்ல மலிவு நிலை ஸ்மார்ட்போனை இப்போது வாங்க முடியும். அதற்காக நீங்கள் சில நாள்கள் மட்டும் பொறுத்திருந்தால் போதும்.

உங்கள் காத்திருப்புக்கு ஏற்ற மதிப்பை இந்த போன் வழங்கும். டெக்னோ புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகமாகிறது.

Nothing Ear (1): புதிய வடிவம் பெறும் நத்திங் இயர் (1) பட்ஸ் ஹெட்போன்!

இதன் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா தான் சிறப்பு வாய்ந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. போனின் பிற அம்சங்கள், எப்போது வெளியாகிறது, விலை என்ன போன்ற விவரங்களை பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8பி அம்சங்கள் – Tecno Spark 8b Specifications

இந்த போனில் 6.6 இன்ச் முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே, 1080 x 2480 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும். கூடுதலாக, இந்த போனின் செயல்திறனுக்காக மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) புராசஸர் கொடுக்கப்படும்.

Power Saving Tips: மின்கட்டண உயர்வால் பதற்றம் வேண்டாம் – இந்த வழியை பின்பற்றி பில் தொகையை பாதியாக்கலாம்!

Tecno Spark 8P ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைப் பெறும். இதனை சக்தியூட்ட 33W வேகமான சார்ஜிங் அம்சம் கிடைக்கிறது. புதிய மலிவு விலை டெக்னோ போனானது 4ஜிபி ரேமுடனும், 3ஜிபி விர்ச்சுவல் ரேமுடன் வருகிறது.

PAN-Aadhaar Link: பான் உடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு முடிவு – இனி அபராதம் செலுத்த வேண்டும்!

ஸ்மார்ட்போனில் படம்பிடிக்க உதவியாக 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்படும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 8பி விலை – Tecno Spark 8b Price in India

டெக்னோ ஸ்பார்க் 8பி போனில் DTS ஸ்டீரியோ சவுண்ட் ஒலித்திறனும் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இந்த மொபைலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பு சற்று ஸ்டைலாக இருக்கிறது.

Telecom: ஓடிடி அனுபவங்களுடன் சிறந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

புதிய டெக்னோ ஸ்பார்க் 8பியின் விலை சுமார் ரூ.9,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், புதிய Tecno Spark 8P ஸ்மார்ட்போன், realmi, xiaomi, moto, Samsung, nokia, infinix, micromax போன்ற நிறுவனங்களின் மலிவு விலை போன்களுடன் நேரடியாக போட்டியிடும் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.