மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் தலைவராக 2வது முறையாகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து ஏர்இந்தியா முதல் ஒவ்வொரு நிறுவனமாக டார்கெட் செய்து நிர்வாக மாற்றங்களையும், விரிவாக்கத் திட்டங்களையும் செய்து வரும் நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளார் சந்திரசேகரன்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தியை பெரிய அளவில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ள சந்திரசேகரன் தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறையை மீண்டும் ஆதிக்கம் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

முகேஷ் அம்பானியும் சந்திரசேகரனும் இனி பக்கத்து வீட்டுக்காரர்கள்! புதிய வீட்டின் விலை என்ன தெரியுமா?!

என்.சந்திரசேகரன்

என்.சந்திரசேகரன்

டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் சேர்மன் ஆக இருக்கும் என்.சந்திரசேகரன் 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் 5 லட்சம் கார்களை விற்பனை செய்யும் இலக்கை கொண்டு உள்ளதாகப் பங்குதாரர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனம்

எலக்ட்ரிக் வாகனம்

இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது தனக்கு அதிகப்படியான நம்பிக்கை இருப்பதாகவும், அடுத்த ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கட்டாயம் 1 லட்சத்தைத் தாண்டும் எனத் தான் உறுதியாக இருப்பதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வருடந்திர பொதுக் கூட்டம்

வருடந்திர பொதுக் கூட்டம்

77வது வருடந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திசேகரன் விரைவில் முதலீட்டாளர்களுக்கான ஈவுத்தொகையை அளிக்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ்
 

டாடா மோட்டார்ஸ்

2021 ஆம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் 5000 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தது, 2022 ஆம் நிதியாண்டில் 19,500 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்தது. 2023ஆம் நிதியாண்டில் 50000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

10 எலக்ட்ரிக் வாகனங்கள்

10 எலக்ட்ரிக் வாகனங்கள்

இதன் மூலம் அடுத்த நிதியாண்டில் 1 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகச் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் 2025 ஆம் நிதியாண்டுக்குள் 10 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது டாடா மோட்டார்ஸ்.

முதலீடு

முதலீடு

டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ் இதற்கு முன்பு TPG நிறுவனத்திடம் இருந்து சுமார் 3500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளது.

போர்டு மோட்டார்

போர்டு மோட்டார்

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்யக் குஜராத் சனந் பகுதியில் இருக்கும் போர்டு நிறுவன தொழிற்சாலையைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தொழிற்சாலையின் பொறுப்புகள் கைமாறும் பணிகளில் டாடா மோட்டார், போர்டு மோட்டார், குஜராத் அரசு இயங்கி வருகிறது.

எல்லாத்துக்கும் சந்திரசேகரன் தான் காரணம்.. ரத்தன் டாடா அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

N Chandrasekaran lays bigger plan and target for tata motors

N Chandrasekaran lays bigger plan and target for tata motors மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இந்த வருடம் வேற லெவல்..!

Story first published: Monday, July 4, 2022, 21:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.