Aliens Search: ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் அறிவியல் உலகில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட்ட காலம் இது. அதுமட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மனித குலத்தின் விருப்பமான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது.

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு காரணம், நமது கிரகத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் இருப்பதுதான். எனவேதான், பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஆராயும்போது நீர் இருக்கிறதா என்பதை தேடுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது.

அதனால்தான், பிற கிரகங்களில் உயிரினங்கள் அதாவது குறிப்பாக வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருக்கிறார்களா என்று தேடும் போதும், ​​தண்ணீர் இருப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானதாக ஆய்கின்றனர்.

பூமியின் சகாவான வியாழனின் செயற்கைக்கோள் யூரோபா தொடர்பான ஆராய்ச்சிகள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்தவையாக இருக்கின்றன.

மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!

யூரோபா தொடர்பான ஆய்வுக்கு முக்கிய காரணம், வியாழன் கிரகத்தின் துணைக்கோளான இது பனியால் மூடப்பட்டிருக்கிறது. மிகவும் அடர்த்தியான பனிப்பாறைகள் இந்த துணைக்கோளின் மேற்பரப்பில் படிந்திருக்கின்றன.

இது பல கிலோமீட்டர் ஆழம் வரை பாறையாக இருக்கும் நிலையில், யூரோபாவின் பனிப்பாறைகளுக்கு உள்ளே திரவ நீர் கொண்ட மிகப்பெரிய கடல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதேபோல, அந்த நீரின் இருப்பு உறுதிப்பட்டால், அங்கு விசித்திரமான கடல் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

ஆனால் எப்படி பல கிலோமீட்டர் தடிமன் கொண்ட பனிப்பாறைகளுக்கு உள்ளே சென்று திரவநீர் இருப்பை தேடுவது? இதுதொடர்பான நாசா யோசித்து வந்தது. அதற்கான ஒரு புதிய தீர்வையும் நாசாவின் விஞ்ஞானி ஒருவர் முன்வைத்துள்ளார். அது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்த கருத்தாக்கத்திற்கு $600,000 பரிசும் வழங்கப்பட்டது.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (NASA’s Jet Propulsion Laboratory ) ரோபோட்டிக்ஸ் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரியும் ஈதன் ஸ்கேலர் (Ethan Schaler), Sensing With Independent Micro-Swimmers (SWIM) என்ற யோசனையை முன்வைத்தார்.

மேலும் படிக்க | சீனாவுக்கு சிக்னல் கொடுக்கும் ஏலியன்கள்: ஆச்சரியம் ஆனால் உண்மையா

அவருடைய கருத்தின்படி, டஜன்கணக்கான மொபைல் ஃபோன் அளவிலான நீச்சல் ரோபோக்களை யூரோபாவிற்கு அனுப்புவதாகும். இந்த ஸ்பெஷல் ரோபோக்கள் தடிமனான பனிக்கட்டிக்கு கீழே உள்ள நீருக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஆனால் பனிப்பாறைகளைக் கடந்து, திரவப் பெருங்கடலை அடைவதற்கு கிரையோபோட் பயன்படுத்தலாம் என்று ஈதன் ஸ்கேலர் கூறுகிறார். இந்த கிரையோபோட் பனிகளை உருக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும், அதில் ஆய்வுக்கு அனுப்பப்படும் ரோபோக்கள் பொருத்தபப்டும்.

பனியை உருக்கி கடலை அடையும். நீச்சல் ரோபோக்களை பயன்படுத்தவும், வெளியிடுவதற்கும் தரவுகளை சேகரிப்பதற்கும் இதுவே உகந்த நேரமாக இருக்கும் என்று நாசா நம்புகிறது.

இந்த வடிவமைப்பு சாத்தியமானால், யூரோபாவில் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற உண்மை அம்பலமாகும். யூரோபாவிற்கு நீச்சல் ரோபோக்களை 2030-ம் ஆண்டுக்குள் நாசா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.