அமேசான் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்!

சர்வதேச அளவில் மிக பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஹைபிரிட் மாடலுக்கு ஏற்றவாறு அலுவலகத்தினை திட்டமிடுவதற்காக, தனது அலுவலக கட்டுமான பணியினை இடை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் வருகைக்கு பிறகு சர்வதேச அளவில் ஊழியர்கள் பணிபுரியும் மாடலில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

பெஸ்ட் சாய்வாலி.. மாதம் ரூ.45,000 வருமானம்.. டீ கடை வணிகத்தில் கலக்கும் நிஷா.. !

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

குறிப்பாக வீட்டில் இருந்து பணி, ஹைபிரிட் மாடல் பணி என பல கலாச்சாரங்கள் உருவாகியுள்ளன. ஆரம்பத்தில் கொரோனா காலத்திற்காக தொடங்கிய இந்த கலாச்சாரம் இன்று, தொடர்ந்து நிரந்தரமாக அந்த யுக்தியை தொடர பல நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

ஹைபிரிட் மாடலுக்கு பச்சை கொடி

ஹைபிரிட் மாடலுக்கு பச்சை கொடி

முன்னதாக இது குறித்த ஒரு ஆய்வில் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக கூறியது. அதோடு நிறுவனங்களுக்கும் செலவினம் குறைவாகும். இதன் காரணமாக நிறுவனங்கள் ஹைபிரிட் பணி மாடலுக்கு ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா நிறுவனங்கள் பலவும் இந்த ஹைபிரிட் மாடல் பணிக்கு பச்சை கொடி காட்டி வருகின்றன.

பணிகள் இடை நிறுத்தம்
 

பணிகள் இடை நிறுத்தம்

அந்த வகையில் அமேசான் இன்க் நிறுவனம் ஹைபிரிட் மாடலுக்கு ஏற்றவாறு தனது உள்கட்டமைப்பு வசதியினை அமைக்கும் பொருட்டு தனது உள்கட்டமைப்பு பணிகளை இடை நிறுத்தம் செய்துள்ளது.

Bellevue and Nashville உள்ளிட்ட இடங்களில் உள்ள 6 பகுதிகளில் இந்த பணியினை இடை நிறுத்தம் செய்துள்ளது. ‘

பணிகளை பாதிக்காது

பணிகளை பாதிக்காது

எனினும் இந்த பணிகள் இடை நிறுத்தமானது எந்த வகையிலும் தங்களது பணியமர்த்தலிலோ அல்லது வேறு எந்த பணிகளையும் பாதிக்காது என இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமேசான் பெல்லூவி, 25,000 வேலைகளையும், நாஷ்வில்லில் 5000 வேலைகளையும் உருவாக்கும் திட்டத்தினை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றம்

எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றம்

கொரோனா பெருந்தொற்றானது மக்கள் வேலை செய்யும் முறையினை கணிசமாக மாற்றியுள்ளது. எங்களது அலுவலகங்கள் மற்றும் நீண்டகால முதலீடுகள் என அனைத்தினையும், எதிர்காலத் தேவையினை பொறுத்து அவற்றை மாற்றியமைக்க நினைக்கிறோம் என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் ஸ்கொட்லர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்

English summary

Amazon pauses work on 6 new US office buildings to weigh hybrid work needs

Amazon pauses work on 6 new US office buildings to weigh hybrid work needs/அமேசான் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்!

Story first published: Saturday, July 16, 2022, 17:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.