”இலங்கைக்கு  இந்தியா துணை நிற்கும்” : சபாநாயகரை சந்தித்த இந்தியத் தூதர்

இலங்கை ஜனநாயகம் நிலைத்து நிற்கவும் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்தியா துணை நிற்கும் என்று இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் எரிவாயு தட்டுபாடு ஏற்பட்டது. மேலும் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இலங்கையின் தெருக்களில் வாகனங்களே செல்லாத அளவிற்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு நிலவியது. மேலும் உணவுப் பற்றாக்குறை என்று மக்கள் பெறும் நெருக்கடியை சந்தித்தனர். இந்நிலையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் தீவரப்படுத்தப்பட்டது. அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் மக்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு தப்பி ஓடினார். மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வின் ஆளுநர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டனர்.  இதனால் அவரும் தலைமறைவானார். தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் மால்தீவின் தலைநகருக்கு தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து அவர் ராஜனாமா செய்வதாக கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

இந்நிலையில் ஜூலை 20ம் தேதி புதிய ஆளுநரை இலங்கை எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சரவை தேர்வு செய்ய உள்ளது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பாவை இந்தியத் தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்தார்.  இலங்கையில் தற்போது நிலவும் சூழலை திறமையாக கையாண்டதற்கு , இந்தியத் தூதர் வாழ்த்து தெரிவித்தார். இலங்கையின் ஜனநாயகம் நிலைத்து நிற்கவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரவும் இந்தியா துணையாக இருக்கும் “ என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் போராட்டக்காரர்களின் ஒரு குழு கொலும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தமிக்கா தஷனாயாக் கூறுகையில், இலங்கை அதிபர் வேட்பாளர்கள் தொடர்பாக வேட்பு மனு வருகின்ற செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்படும். அதிபர் வேட்பாளர் ஒருவருக்கு மேலே இருந்தால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.  மேலும் அவர் கோத்தபயவின் ராஜனாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் படித்தார். இலங்கை மக்கள் மற்றும் எதிர்கட்சியினரின் விருப்பதற்கு இணங்க பதிவியை ராஜனாமா செய்வதாகவும். தான் பதவியேற்ற காலம் முதல் கடும் பொருளாதார நெக்கடி நிலவியதாகவும், தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கால்தான் நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.