வரும் வாரத்தில் தங்கத்தின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்.. விலை என்னவாகுமோ?

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் எதிர்மறையாக வர்த்தகமாகி முடிவடைந்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 1.32% முடிவடைந்தது.

இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தினை எட்டிய நிலையில், தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இதே ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானதுஅவுன்ஸூக்கு 2.02% சரிவினைக் கண்டது. இது 1706 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இது கடைசியாக கடந்த அமர்வில் 1697 டாலர்களை தொட்ட பிறகு இந்த அளவினை எட்டியுள்ளது.

செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

வட்டி அதிகரிக்க வழிவகுக்கலாம்

வட்டி அதிகரிக்க வழிவகுக்கலாம்

இதே வெள்ளியின் விலையானது ஒரே வாரத்தில் 3.12% சரிவினைக் கண்டது. இது கடந்த அமர்வில் 16.69 டாலர்களாகவும் முடிவுற்றது. இதே இந்திய சந்தையில் 2.70% குறைந்து, 55,587 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பணவீக்க விகிதமானது, மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் இன்டெக்ஸ்

டாலர் இன்டெக்ஸ்

ஏற்கனவே டாலரின் மதிப்பானது தொடர்ந்து இரு தசாப்தங்களில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. இது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. டாலரின் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசிபி கூட்டம
 

இசிபி கூட்டம

வரவிருக்கும் வாரத்தில் முதலீட்டாளர்களின் கவனம் இசிபி கூட்டத்தில் இருக்கலாம். இது வரவிருக்கும் வாரத்தில் முக்கிய நிகழ்வாக இருக்கலாம். இசிபி 2011க்கு பிறகு முதல் முறையாக வட்டி விகித்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.

 டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

இந்திய ரூபாய் மதிப்பானது தங்கம் விலையில் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம். ரூபாய் மதிப்பானது தொடர்ந்து கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத சரிவினைக் கண்டு வருகின்றது.

அமெரிக்காவின் பிஎம்ஐ தரவு

அமெரிக்காவின் பிஎம்ஐ தரவு

அமெரிக்காவில் உற்பத்தி குறித்தான தரவானது வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். பிஎம் ஐ விகிதமானது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நெருக்கடி

சீனாவின் நெருக்கடி

சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் நெருக்கடியான நிலையானது, இன்னும் சீனாவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனா முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 key factors that will determine the price of gold in the coming week: check details

5 key factors that will determine the price of gold in the coming week: check details/ வரும் வாரத்தில் தங்கத்தின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்.. விலை என்னவாகுமோ?

Story first published: Sunday, July 17, 2022, 10:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.