5 மடங்கு வாடிக்கையாளர்களை இழந்த நெட்ஃபிக்ஸ்.. இனி திக் திக் மொமென்ட் தான்..!

OTT தான் எதிர்காலம் என நம்பப்படும் நிலையில் உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்று வந்த நெட்ஃபிக்ஸ் தற்போது மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை முறைக்குத் திரும்பிய வேளையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

இதேவேளையில் நெட்ஃபிக்ஸ்-க்குப் போட்டியாக இருக்கும் அமேசான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டார் சிறிய திரைப்படங்கள், ஐபிஎல் போன்றவற்றின் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்று உள்ளது.

நெட்ஃபிக்ஸ் பணம் செலுத்தி மக்கள் திரைப்படங்களையும், வெப் சீரியஸ் போன்றவற்றைப் பார்க்கும் நிலையில், இந்த வாடிக்கையாளர் சரிவு என்பது பிற ஓடிடி தளங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

ஈரான் உடன் கைகோர்க்கும் ரஷ்யா.. ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு.. விளாடிமிர் புதின் ஸ்மார்ட்டான திட்டம்..!

நெட்ஃபிக்ஸ்

நெட்ஃபிக்ஸ்

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட கிட்டதட்ட10 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தும் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

10 லட்சம் வாடிக்கையாளர்கள்

10 லட்சம் வாடிக்கையாளர்கள்

இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையில் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 9,70,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது, இந்நிறுவனம் முதல் காலாண்டில் இருந்து 2,00,000 வாடிக்கையாளர்களை இழந்த நிலையில் 2வது காலாண்டில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக 10 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

9 சதவீத வருவாய் வளர்ச்சி
 

9 சதவீத வருவாய் வளர்ச்சி

இரண்டாம் காலாண்டு மெம்பர்ஷிப் வளர்ச்சியில் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருந்தது, மேலும் அந்நியச் செலாவணி எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது, இதன் விளைவாக வருவாய் வளர்ச்சி 9 சதவீதமாக உள்ளது என நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா

அமெரிக்கா, கனடா

நெட்ஃபிக்ஸ் அமெரிக்காவிலும் கனடாவிலும் 73.28 மில்லியன் கட்டண சந்தாதாரர்களையும், உலகளவில் 220.67 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாம் காலாண்டில் புதிதாக ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

5 மடங்கு இழப்பு

5 மடங்கு இழப்பு

Netflix இன் படி, 2021 இல் 7.3 பில்லியன் டாலர் வருவாயில் இருந்து இந்தக் காலாண்டில் 9 சதவீத வளர்ச்சியில் 7.97 பில்லியன் டாலராக உள்ளது. முதல் காலாண்டில் 2 வாடிக்கையாளர்களை இழந்த நெட்ஃபிக்ஸ் ஜூன் காலாண்டில் 5 மடங்கு அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் விரைவில் ரெசிஷன்.. உச்சகட்ட பீதியில் இந்திய ஐடி – BPM நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Netflix lost 10 lakh Users in june quater

Netflix lost 10 lakh Users in june quater 5 மடங்கு வாடிக்கையாளர்களை இழந்த நெட்ஃபிக்ஸ்.. இனி திக் திக் மொமென்ட் தான்..!

Story first published: Wednesday, July 20, 2022, 20:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.