இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக,ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க ,பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (21)  பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாராளுமன்றத்தை வந்தடைந்த அவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

73 வயதான இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவர் 1993 முதல் 1994, 2001 முதல் 2004, 2015 முதல் 2018, 2018 முதல் 2019 மற்றும் 2022 வரை ஆறு முறை இலங்கையின் பிரதமராக பணியாற்றியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.