மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்ப சட்டத்தில் மாற்றம் தேவை என எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் எழுதிய கடிதத்தில், “மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்புவது, தண்டனை கொடுப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும். இந்த நடவடிக்கை தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும், இலக்கை அடைய முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதம் தற்போது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த வித்தியாசமான கோரிக்கையின் பின்னணியும் ஆச்சரியமானதாக இருக்கிறது.

பெண் மாணவியை கொன்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நேரலையாக ஒளிபரப்ப ஏதுவாக, சட்டத்தை மாற்றுமாறு எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. மொஹமத் அடெல் என்பவர், தனது சக மாணவி நயேரா அஷ்ரஃப்  என்பவரை கொலை செய்தார். இந்த கொலையை செய்ததாக மாணவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க | திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

கொலை செய்த மாணவரிடம் நடைபெற்ற இரண்டு நாள் விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த  மன்சௌரா குற்றவியல் நீதிமன்றம், அடேலுக்கு தண்டனை வழங்கியது. அதோடு, மரணதண்டனையை நேரடியாக ஒளிபரப்பும் வகையில், மரண தண்டனையை நிர்வகிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.  

இது தொடர்பாக, நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், “ஒளிபரப்பு, நடவடிக்கைகள், தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே என்றாலும், இது இலக்கை அடைய உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம், மன்சூராவில் உள்ள பல்கலைக்கழகத்தில், அஷ்ரஃப் கொலை செய்யப்பட்ட வீடியோ வைரலானது, ​​​. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு

2021 ஆம் ஆண்டில் உலகளவில் மரணதண்டனைகளை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியலில் எகிப்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கிறது.

ஆனால் நீதித்துறையால் விதிக்கப்பட்டும் மரணதண்டனை அரிதாகவே பொது இடங்களில் நடத்தப்படுகிறது அல்லது ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1998 இல் கெய்ரோவில் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த மூன்று ஆண்களின் மரணதண்டனை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது என்றாலும், இது விதிவிலக்கான விஷயமாக இருந்துவந்தது. 

மேலும் படிக்க | விண்வெளியில் காந்தப்புயல்

சமீப மாதங்களில், எகிப்தில் நடைபெறும் பெண் கொலைகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தூண்டியுள்ளன. ஜூன் மாதம் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஷைமா கமாலின் மரணம் வட ஆப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எகிப்தில், ஆணாதிக்க சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால், பெண்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தாத முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய எட்டு மில்லியன் எகிப்தியப் பெண்கள் தங்கள் கூட்டாளிகள், குடும்பத்தினர் அல்லது அந்நியர்களால் பொது இடங்களில்  துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | 9,494 காலிப் பணியிடங்கள் – TRB வெளியிட்ட அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.