இலங்கை அரசாங்கத்தால் மீளவும் கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது


நேற்றைய தினம் செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் சர்வதேச கடனை இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த முடியாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை 2012 இல் பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட சர்வதேச இறையாண்மைப் பத்திரம் நேற்றைய நிலவரப்படி முதிர்ச்சியடைந்துள்ளது.

எனினும், டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையால் அதனை செலுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தால் மீளவும் கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது | Sri Lankan Government Was Unable To Repay The Loan

இதேவேளை, வெளிநாட்டு உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றை செலுத்தப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.