“குற்றங்களை ஏற்படுத்தாத கஞ்சாவை ஊக்குவிக்க வேண்டும்" – சத்தீஸ்கர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க மதுவை தடை செய்துவிட்டு, கஞ்சாவை விநியோகிக்க வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சத்தீஸ்கர் மாநிலம், கவுரேலா-பென்ட்ரா-மார்வாஹி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி, “பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றங்களுக்கு மதுதான் காரணம் என்று என்னிடம் கூறப்பட்டது. இதுகுறித்து கடந்த காலங்களில் சட்டசபையிலும் நான் விவாதித்தேன்.

பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி

அப்போது, பாங்கு உட்கொள்ளும் ஒருவர் எப்போதாவது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டாரா? என்று சட்டசபையில் கேட்டேன். மேலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், மதுவை தடை செய்யும் விதமாகவும், மாநிலத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாங்கு மற்றும் கஞ்சாவை நோக்கி நாம் எவ்வாறு முன்னேறலாம் என்று குழு சிந்திக்க வேண்டும்.

கஞ்சா

மக்கள், போதைக்கான அடிமைத்தனத்தை விரும்பினால் அவர்களுக்கு கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களை ஏற்படுத்தாத இதுபோன்ற பொருள்களை விநியோகம் செய்யவேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்” என்று கூறியிருந்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இத்தகைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், மக்களின் பிரதிநிதி எப்படி போதை பழக்கத்தை ஊக்குவிக்கலாம் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.