மும்பை: மகாராஷ்டிராவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பெண் விமானி காயமடைந்தார். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் தனியார் விமான பள்ளிக்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பெண் விமானி இதில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். புனேவின் பாராமதி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் காலை 11.30 மணியளவில் இன்தபூரின் கத்பான்வாடியில் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பெண் விமானி பாவ்னா காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.