விப்ரோ-வுக்கு அடித்தது ஜாக்பாட்.. நோக்கியா உடன் 5 வருட ஒப்பந்தம்..!

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, நோக்கியா நிறுவனத்துடன் 5 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நோக்கியாவுடனான இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் மாற்றம், உலகளாவிய வணிக சேவைகளில் செயல்திறன் உள்ளிட்டவற்றை இலக்காக கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு கூட்டாண்மையை உருவாக்குகிறது.

சீனா-வை நெருங்கும் இந்தியா.. 2 மடங்கு வளர்ச்சி..!

சர்வதேச அளவிலான வணிக சேவை

சர்வதேச அளவிலான வணிக சேவை

விப்ரோவுடனான இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவிலான வணிக சேவையை வழங்கும். இதன் மூலம் நோக்கியாவுக்கு தனது ஆதரவினை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செயல்பாடுகளை மேம்படுத்துதல், சப்ளை சங்கிலி தொடர்பான நிர்வாகம், நிதி மற்றும் கணக்கியல் தொடர்பான சிறப்பான அனுபவம் உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகள் மேம்படும்

செயல்பாடுகள் மேம்படும்

மொத்தத்தில் இவ்விரு நிறுவனங்களின் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நோக்கியாவின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் மேம்படும். அதோடு இரு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் நோக்கியாவின் நீண்டகால வர்த்தக பங்காளியாக விப்ரோ மாறும் என இந்த நிறுவனத்தின் உலகளாவிய வணிக சேவைகளுக்காக துணைத் தலைவர் ராட் லிண்டே கூறியுள்ளார்.

தடையற்ற சேவை
 

தடையற்ற சேவை

இதன் மூலம் ஒருகிணைக்கப்பட்ட சேவை,தடையற்ற சேவை ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் உலகலாவிய வணிக சேவை என பல நன்மைகளை நோக்கியாவுக்கு வழங்குவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் நிறுவனம் முக்கிய மைக்கல்லை எட்டும் என்றும் லின்ட்சே தெரிவித்துள்ளார்.

மதிப்பு தெரியவில்லை

மதிப்பு தெரியவில்லை

விப்ரோவின் துணைத் தலைவர், நோர்டிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனருமான வினய் பிராக் கருத்துப்படி, நோக்கியாவை வெற்றி பெறச் செய்வது எங்களின் நோக்கம் என கூறியுள்ளார்.

எனினும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்தான மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இன்றைய பங்கு விலை என்ன?

இன்றைய பங்கு விலை என்ன?

விப்ரோ பங்கு விலையனது என் எஸ் இ-யில் 2.31% குறைந்து, 405.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 415.40 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 404.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 739.85 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 391 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

பி எஸ் இ-யில் இப்பங்கு விலையானது, 2.28% குறைந்து, 405.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 415.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 404.35 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 391 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Wipro announces 5-year deal with Nokia

Wipro announces 5-year deal with Nokia/விப்ரோ-வுக்கு அடித்தது ஜாக்பாட்.. நோக்கியா உடன் 5 வருட ஒப்பந்தம்..!

Story first published: Tuesday, July 26, 2022, 22:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.