30 வருட தோல்வி, 51 வயதில் திருப்பம்.. மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மீனாட்சி அம்மாள்!

30 வருடங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து தோல்வி அடைந்த நிலையில் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனாட்சி அம்மாள் தற்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

இவர் யூடியூபில் அம்மா சமையல், அம்மா வீட்டு சமையல் ஆகிய சேனல்களை தொடங்கி உள்ளார் என்பதும் இவரது யூடியூப் சேனலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது தனது யூடியூப் சேனல் முதல் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவருடைய வெற்றி கதையை தற்போது பார்ப்போம்.

தங்கம் விலையில் ஏன் இந்த தடுமாற்றம்.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

காஞ்சிபுரம் மீனாட்சி

காஞ்சிபுரம் மீனாட்சி

காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனாட்சி அம்மாள் குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. 16 வயதில் திருமணமானதை அடுத்து கணவருடன் சென்னையில் செட்டில் ஆனார். கார் மெக்கானிக்கான கணவரின் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது கஷ்டமாக இருந்ததால் முதலில் யூரியா பை விற்கும் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்.

தொன்னை கப்

தொன்னை கப்

மீனாட்சி அம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் ஆன பிறகு குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு நேரம் சரியாக இருந்ததால் வீட்டிலிருந்தே தொன்னை கப் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் பிளாஸ்டிக் கப்புகளுக்கு வரவேற்பு அதிகமானதால் தொன்னை கப்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதால் அதை நிறுத்திவிட்டார்.

யூடியூப் சேனல்
 

யூடியூப் சேனல்

அதன் பின்னர் ஊறுகாய், மசாலா பொடி தயாரித்து வீடுவீடாக சப்ளை செய்யும் பணியை செய்த மீனாட்சி அம்மாளுக்கு திடீரென அவருடைய பையன் கொடுத்த ஐடியா காரணமாக யூடியூப் சேனலை ஆரம்பித்தார். யூடியூப் சேனலை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி அதில் இயக்க வேண்டும் என்பதை எல்லாம் அவருடைய மூத்த மகன் தான் அவருக்கு சொல்லிக் கொடுத்தார். அப்போதே அவருடைய மகன் ஒரு சில வருடங்கள் கழித்து நீங்கள் மிகப் பெரிய ஆளாக யூடியூபில் வருவீர்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் நம்பிக்கை கொடுத்த அந்த பையன் ஒரு விபத்தில் திடீரென இறந்து விட்டதால் மீனாட்சி அம்மாள் மனது உடைந்து போனார். அவரது மகன் மறைவு மீனாட்சி அம்மாளின் வாழ்வில் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

சமையல் வீடியோ

சமையல் வீடியோ

இந்த நிலையில் மகன் இறந்த பிறகு அவருடைய இரண்டாவது மகன் அண்ணனின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் யூடியூபில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். முதலில் யூடியூப் சேனல் ஆரம்பித்த போது வெறும் 63 சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே இருந்தனர். எல்லோரும் சமையல் வீடியோ போடுகிறார்கள் என்பதால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தார்.

சமையல் வ்ளாக்

சமையல் வ்ளாக்

மீனாட்சி அம்மாள் ஒரே இடத்தில் நின்று சமையல் செய்யாமல் ‘சமையல் வ்ளாக்’ (Cooking Vlog) ஒன்றை ஆரம்பித்தார். ‘அம்மா வீட்டு சமையல்’ என்ற இன்னொரு சேனலை ஆரம்பித்து தோசைக்கல் சுத்தம் செய்வது முதல் பல சமையல் ஐடியாக்களை பதிவிட ஆரம்பித்தார். அந்த ஐடியா அவருக்கு வொர்க்-அவுட் ஆனது.

மாதம் ஒரு லட்சம்

மாதம் ஒரு லட்சம்

தற்போது இரண்டு சேனலிலும் சேர்த்து 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளதாகவும் மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் வருவதாகவும் அவர் சந்தோசத்துடன் கூறியுள்ளார். நான் என் மகனின் கனவை நனவாக்க ஓடினேன். என் பெரிய பையன் ஆசைப்பட்டது மாதிரி தற்போது நாள் யூடியூபில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அவர் கண்ணீருடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாரத்திற்கு 5 வீடியோ

வாரத்திற்கு 5 வீடியோ

யூடியூப் சேனலை பொறுத்தவரை ரெகுலராக வீடியோ பதிவு செய்தால் மட்டுமே சப்ஸ்கிரைபர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் வாரத்திற்கு 5 வீடியோக்களை அப்லோடு செய்கிறோம் என்றும் அவ்வப்போது ஐடியாக்களை தயார் பண்ணி வைத்து வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் என்றும் மீனாட்சி அம்மாள் கூறியுள்ளார்.

நம்பிக்கை - விடாமுயற்சி

நம்பிக்கை – விடாமுயற்சி

30 வருடங்கள் பல்வேறு தோல்வி அடைந்த மீனாட்சி அம்மாள் தற்போது தனது நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் மறைந்த தனது மகனின் கனவை நிறைவேற்றும் வகையில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார். அவருடைய வாழ்க்கை விடா முயற்சி கண்டிப்பாக ஒருநாள் வெற்றி பெறும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The story of Meenakshi Ammal who success in youtube and get monthly one lakh!

The story of Meenakshi Ammal who success in youtube | 30 வருட தோல்வி, 51 வயதில் திருப்பம்.. மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மீனாட்சி அம்மாள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.