SBI வங்கியில் ரூ.1.45 லட்சம் கோடி கடன் ரைட்-ஆப்.. ஒரே வங்கியில் இவ்வளவா.. மற்ற வங்கிகளின் நிலை?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மீண்டும் 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடனை ரைட் ஆப் செய்துள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் (FY 13 -14) – (FY21 – 22), எஸ்பிஐ 1,45,248 கோடி ரூபாய் மதிப்பிலான மோசமான கடனை ரைட் ஆப் செய்துள்ளது.

எனினும் இவர்களிடம் இருந்து 13% அதிகமான தொகையை வசூல் செய்வதாகவும் அறிவித்துள்ளது.

பெங்களூரில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா.. அப்போ தமிழ்நாட்டில் இல்லையா..?

ரைட் ஆஃப்

ரைட் ஆஃப்

இதில் 2013 – 14ம் ஆண்டில் 3,248 கோடி ரூபாய் கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் வெறும் 12 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதே 2014 – 15ம் நிதியாண்டில் 5630 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

2015 - 17 காலகட்டத்தில் எவ்வளவு?

2015 – 17 காலகட்டத்தில் எவ்வளவு?

2015 – 16ம் நிதியாண்டில் 8461 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. அதேசமயம் 261 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை அந்த காலகட்டத்தில் மீட்டுள்ளது.

இதே 2016 – 17ம் நிதியாண்டில் 13,587 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. எனினும் 308 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை இந்த காலகட்டத்தில் மீட்டுள்ளது.

2017-19ம் ஆண்டில் எவ்வளவு?
 

2017-19ம் ஆண்டில் எவ்வளவு?

2017 – 18ம் நிதியாண்டில் 17,548 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. அதே காலகட்டத்தில் 815 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

2018 – 19ம் நிதியாண்டில் 27,225 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2215 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

2020 - 21ம் ஆண்டில் என்ன நிலவரம்?

2020 – 21ம் ஆண்டில் என்ன நிலவரம்?

2019 – 2020ல் 46,348 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 5,366 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

2020 – 21ல் வெறும் 17,816 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 6,507 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டில் என்ன நிலவரம்?

கடந்த ஆண்டில் என்ன நிலவரம்?

2021 – 2022ம் ஆண்டில் 5385 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் செய்ப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 4176 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் இந்த 9 ஆண்டுகளில் 1,45,248 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த 9 ஆண்டுகளில் மீட்பு என்பது 19,678 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மணி லைஃப் தரவு சுட்டிக் காட்டுகின்றது.

 

லிஸ்டில் யாரெல்லாம்?

லிஸ்டில் யாரெல்லாம்?

எஸ்பிஐ-ன் இந்த மோசமான கடன் பட்டியலில் 2020ல் மட்டும் அலோக் இண்டஸ்ட்ரீஸ், பூஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட், IRVCL லிமிடெட், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடங்கும். எனினும் மற்ற நிறுவனங்களின் பட்டியலை இவ்வங்கி வெளியிடவில்லை.

எஸ்பிஐ-ல் மட்டுமே இந்த அளவுக்கு எனில், மற்ற பொதுத்துறை வங்கிகளில் எவ்வளவு இருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

1.45 lakh crore loan write-off has been done in SBI in the last 9 years

1.45 lakh crore loan write-off has been done in SBI in the last 9 years/எஸ்பிஐ-ல் மட்டும் ரூ.1.45 லட்சம் கோடி ரைட் ஆப்.. ஒரே வங்கியில் இவ்வளவா.. மற்ற வங்கிகளின் நிலை?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.