ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க.

“இது அர்த்தமற்ற கேள்வி. கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வ திலிருந்து, அதைக் கொண்டுவந்து சேர்ப்பது வரை அனைத்து வேலை களையும் முழுமையாகச் செய்வது மத்திய அரசுதான். இவற்றில் எதையுமே செய்யாமல் பெட்ரோல், டீசல் விற்பனையில் பணத்தை மட்டும் மாநில அரசு வாங்கிக் கொள்கிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இதே தி.மு.க அரசுதான். இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறார்களா… அண்டை மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் விலை அதிகரித்துத்தான் இருக்கிறது. இப்படியான சூழலில் எங்களைக் கேள்வி கேட்க தி.மு.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது… இவர்கள் ஆட்சிக்கு வந்து மின் உற்பத்தியை அதிகரிக்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா… தனியார் உற்பத்தி நிறுவனங் களிலிருந்துதான் இவர்கள் மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள். இவர்களுக்கு வரும் கமிஷன் போய்விடும் என்பதால்தான் புதிதாக பவர் பிளான்ட் எதுவும் தொடங் காமல் இருக்கிறார்களா என்ற சந்தேகம் உண்டாகிறது. அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பாருங்கள். ஆனால், இந்தியாவில் விலை குறைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளை மட்டுமே சந்தித்துவருகிறது. அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. இரட்டை வேடம் போட்டுக்கொண்டு, இவர்களின் தவறுகளை மறைக்க மத்திய அரசைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அரசின் முகத்திரையைத் தமிழ்நாடு பா.ஜ.க கிழித்துக்கொண்டிருக்கிறது!”

வினோஜ் பி. செல்வம்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க.

“செந்தில் பாலாஜி மிகச் சரியாகச் சொல்லி யிருக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவிட்டு, இப்போது விலை உயர்த்தப்பட்டிருக் கிறது என்று போராட்டம் நடத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள். குஜராத்தில் 100 யூனிட்டுக்கு 515 ரூபாயும், 200 யூனிட்டுக்கு 1,045 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது; 200 யூனிட்டுக்கு 225 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. உண்மையில், அண்ணாமலை போராட்டம் நடத்தவேண்டியது தமிழ்நாட்டில் கிடையாது. இவர்கள் மாடல் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் குஜராத் தில்தான். பெட்ரோல், டீசலில் மாநில அரசுக்கு வரும் மொத்த வருவாயையும் எடுத்துக்கொண்டு, நாங்கள் விலையைக் குறைக்கவில்லை என்று எங்களைக் குற்றம் சொல்வது அர்த்தமற்ற செயல். தேர்தல் நடந்த அந்த ஆறு மாத காலமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவே இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும் பெட்ரோல் நிறுவனங் களால் விலை ஏற்றம் செய்யாமல் இருக்க முடிந்ததா… தேர்தல் முடிந்ததுமே, பா.ஜ.க-வுக்கு கமிஷன் கொடுக்கத் தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் நடந்தது என்று நாங்கள் சந்தேகிக்கலாமா… கொடுத்த 505 வாக்குறுதி களில், 270 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக் கிறது தி.மு.க. விரைவில் நீட் ரத்து, மகளிருக்கு 1,000 ரூபாய் உட்பட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற் றப்படும். பா.ஜ.க தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை 45 ரூபாய்க்குக் குறைக்கப்படும், 300 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படும் என்று சொன்னார்களே செய்தார்களா… எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வினர் எங்களைக் குறை சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.