சொந்த வீட்டை விற்ற மார்க் ஜூர்க்கர்பெர்க்.. 3 மடங்கு லாபம்.. என்ன விலை தெரியுமா?

உலக பணக்காரர் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது சொந்த வீட்டை மூன்று மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டின் மதிப்பின்படி மார்க் ஜூர்க்கர்பெர்க் அவர்களுக்கு 67.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இந்த நிலையில் அவர் தனக்கு சொந்தமான சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீட்டை அவர் என்ன விலைக்கு வாங்கினார்? தற்போது எந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்பதை தற்போது பார்ப்போம்.

பணம் எடுக்கும் விதிமுறைகள் மாற்றம்.. SBI ஏடிஎம் வைத்திருப்போர் இதை தெரிந்து கொள்ளுங்க!

சான்பிராஸ்சிஸ்கோ வீடு

சான்பிராஸ்சிஸ்கோ வீடு

ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டை $31 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டில் அவர் இந்தவீட்டை வாங்கிய தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

$10 மில்லியனுக்கு வாங்கிய வீடு

$10 மில்லியனுக்கு வாங்கிய வீடு

மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு சொந்தமான சான் பிரான்சிஸ்கோ வீடு மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். ஜுக்கர்பெர்க் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வீட்டை சுமார் $10 மில்லியனுக்கு வாங்கினார். 7,000 சதுர அடிக்கும் மேலான இந்த வீடு டோலோரஸ் பூங்காவில் உள்ள லிபர்ட்டி ஹில் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடு 1928ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் வீடு மட்டும் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

விற்பனை
 

விற்பனை

மார்க் ஜுக்கர்பெர்க் பத்து ஆண்டுகளுக்கு முன் $10 மில்லியனுக்கு வாங்கிய வீட்டை தற்போது மூன்று மடங்கு லாபத்தில் அதாவது $31 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளார். அவர் ஏன் இந்த வீட்டை விற்பனை செய்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

புகார்கள்

புகார்கள்

இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றின் தகவலின்படி $10 மில்லியன் மதிப்புள்ள இந்த வீடு, முதலில் 7,400 சதுர அடிக்கு மேல் பட்டியலிடப்பட்டது என்றும், மார்க் ஜுக்கர்பெர்க் வாங்கியவுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாக கூறியுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக, கட்டுமானம் மற்றும் ‘சட்டவிரோதமாக’ நிறுத்தப்பட்ட கார்கள் குறித்து ஜுக்கர்பெர்க் மீது புகார்களும் எழுந்துள்ளது.

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றொரு வீடு

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றொரு வீடு

சிலிக்கான் பள்ளத்தாக்கில் மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது குடியிருக்கும் வீடு $37 மில்லியன் மதிப்பிலானது. மார்க் ஜுக்கர்பெர்க் இந்த வீட்டை கடந்த 2011ஆம் ஆண்டு $7 மில்லியன் டாலருக்கு வாங்கியவுடன் இந்த வீட்டைச் சுற்றியுள்ள நான்கு வீடுகளையும் வாங்கி ஐந்தையும் சேர்த்து ஒரு பெரிய எஸ்டேட்டாக மாற்றியுள்ளார். இதனால் இந்த வீட்டுக்கு ஐந்து வளாக வீடு என்ற பெயரும் உண்டு.

15வது இடம்

15வது இடம்

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு 2022 இல் $67.3 பில்லியன் ஆகும். ஃபோர்ப்ஸின் ‘உலகப் பணக்காரர்கள்’ பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் 15வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Facebook Mark Zuckerberg sells his San Francisco house for $31 million!

Facebook Mark Zuckerberg sells his San Francisco house for $31 million! | 3 மடங்கு லாபத்துடன் சொந்த வீட்டை விற்ற மார்க் ஜூர்க்கர்பெர்க்.. எத்தனை மில்லியன் டாலர் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.