கூகுளில் வேலைக்கு சேர முயற்சித்த நபர்.. 40வது முறை கிடைத்த அதிர்ஷ்டம்! வைரலாகும் பதிவு


அமெரிக்காவில் நபர் ஒருவர் 40 முறை கூகுளில் வேலைக்கு முயற்சித்து வெற்றி பெற்ற பதிவு வைரலாகியுள்ளது.

டைலர் கோஹென் என்ற நபர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக வேலை பார்த்து வந்த கோஹென், தனக்கு பிடித்தமான கூகுளில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார்.

அதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக கூகுளில் விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் வருத்தமடைந்தாலும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை.

அவர் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார்.

இவ்வாறாக மொத்தம் 39 முறை அவர் விண்ணப்பித்தார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

Tyler Cohen

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி அவரது 40வது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை அறிந்த கோஹென் மகிழ்ச்சியில் திளைத்துடன், தனது சமூக வலைதள பக்கத்தில் வேலைக்காக விண்ணப்பித்ததை Screenshot ஆக எடுத்து பகிர்ந்துள்ளார்.

அவரது விட முயற்சியை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டைலர் கோஹெனின் அந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.    

கூகுளில் வேலைக்கு சேர முயற்சித்த நபர்.. 40வது முறை கிடைத்த அதிர்ஷ்டம்! வைரலாகும் பதிவு | Man Got Offer In Goole After40th Attempt



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.