வெறும் ரூ.3,295 செலுத்தி iPhone 13 வாங்கலாம் – ஐபோன் 14 வருகையை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு!

iPhone 13 128GB: ஐபோன் என்றாலே எதிர்பார்ப்புகள் பயனர்கள் மத்தியில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில் ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன், 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்ப்புகளை மிஞ்சி இந்த போன் விற்பனையில் சாதனை படைத்தது.

இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது. iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப்பிள் ஐபோன் 14 செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில், நிறுவனம் தற்போது லேட்டஸ்டாக இருக்கும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதிதிறன் கொண்ட கேமராக்கள், புராசஸர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5G Auction: வேற யாருக்கும் இந்த தைரியம் வரல; உயர்தர சேவை வழங்க 700 Mhz Band-இல் கைவைக்கும் ஜியோ!

ஐபோன் 13 சலுகைகள் (iPhone 13 Offers)

அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் உங்களால் வாங்க முடியும். அதாவது. 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஐபோன் 13 விலை ரூ.79,900 ஆக அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நேரடியாக கிடைக்கும் ரூ.10,000 சலுகையை கழித்தால், போனின் விலை 69,990 ஆக இருக்கும். இவ்வளவு தானா என்றெல்லாம் எண்ண வேண்டாம். ஐசிஐசிஐ வங்கி அமேசான் பே கிரெடிட் கார்டு வைத்திருந்தால் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

மேலதிக செய்தி:
Flipkart Offers: சிறந்த ஆஃபர்களுடன் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்!

இதுமட்டுமில்லாமல் நல்ல நிலையில் இருக்கும் போன்களுக்கு ரூ.23,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. அமேசானின் இந்த அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பயன்படுத்தினால் சுமார் ரூ.45,000 என்ற விலையில் புதிய ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

சுலப மாதத் தவணை திட்டமும் இந்த போனுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கடன் அட்டைகள் உதவியுடன் போனை வெறும் ரூ.3,295 செலுத்தி நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

மோடியால் போன் விற்பனை ஜோர்; PLI திட்டத்தால் கிடைத்த பயன்!

ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications)

ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 6.1″ இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே 2532×1170 பிக்சல் ரெசலியூஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. செராமிக் கொண்டு டிஸ்ப்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது. iOS 13 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏ15 பயோனிக் சிப்செட் இந்த போனை இயக்குகிறது. இதை சக்தியூட்ட 3,227mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 20W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உண்டு.

அசத்தல் சினிமா தர கேமராக்களை ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் பல விதமாக படங்களை எடுக்க முடியும். மேலும், 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்.எஃப்.சி, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவும் அடங்கியுள்ளது.

Apple iPhone 12 Pro Max விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Apple A14 Bionicசேமிப்பகம்128 GBகேமரா12 MP + 12 MP + 12 MPஇந்திய விலை129900டிஸ்பிளே6.7 inches (17.02 cm)முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.