#BIG NEWS:- மாணவர்களுக்கு சிற்றுண்டி.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பள்ளி மாணவ – மாணவியர்களிடையே மனநல மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; “மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.

நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும். உடல்நலனை மாணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் அம்மாவாக, அப்பாவாக இருந்து சொல்கிறேன். நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டேன்.

அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன்.

மாணவர்கள் யாரும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரக்கூடாது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.