மிட்டாய் சுவைக்க $100K சம்பளம்… 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் – எங்கே தெரியுமா?

மிட்டாய்கள், சாக்லேட்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பட்டியலில் மிட்டாய்களுக்கென தனி இடம் உண்டு.

கனடாவில் உள்ள கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற நிறுவனம் ஆன்லைனில் மிட்டாய்களை விற்று வருகிறது. மிட்டாய்களின் சுவையை பரிசோதிப்பதற்கு, உலகளவில் முதன்முறையாக தலைமை மிட்டாய் அதிகாரியை (Chief Candy Officer) வீட்டில் இருந்தபடியே வேலைசெய்ய (work from home) நியமிக்க உள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மிட்டாய்

மிட்டாய்களை சுவைப்பதற்கு சம்பளமா எனப் பலரும் இதை வியப்பாக பார்த்து வருகின்றனர். ஆனால் அதிசயிக்கும் வகையில் ஆண்டுக்கு 100,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையராக, வடஅமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் போதும்.

இப்பதவியில் நியமிக்கப்படுபவர், ஒரு மாதத்திற்கு சுமார் 3,500 தயாரிப்புகளின் சுவையை சோதனை செய்து அதற்கு ஒப்புதல் முத்திரையை வழங்கவேண்டும். ஃபன்ஹவுஸில் சாக்லேட் யுக்திகளை பயன்படுத்துவதோடு, சாக்லேட் தொடர்பான போர்டு மீட்டிங் நடத்துவதும் இவரின் பொறுப்புகளில் வரும்.

மிட்டாய்

மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவங்கள் ஏதும் தேவை இல்லை. ஆனால் மிட்டாய்கள், பாப் கலாசாரம் மற்றும் ஊடங்கங்களின் மீது ஆர்வமும், கிரியேட்டிவ்வாகவும், இயற்கையிலேயே தலைமை பண்பு கொண்டவராகவும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எப்படி வேடிக்கையாக நடந்து கொள்வது எனத் தெரிந்தும் இருக்க வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.

தலைமை மிட்டாய் அதிகாரியின் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.