விண்வெளி வீரரின் சட்டை ரூ. 22 கோடிக்கு ஏலம்| Dinamalar

வாஷிங்டன் : நிலவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரினின் ‘விண்வெளி சட்டை’ ரூ. 22.37 கோடிக்கு ஏலம் போனது.

1969ல் அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) 1969 ஜூலை 16ல் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் எட்வின் ஆல்ட்ரின், பைலட் மைக்கேல் காலியன்ஸ் ஆகிய 3 வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து விண்கலத்தில் இருந்து இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதலில் காலடி வைத்தார். பின் 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கி சாதித்தனர்.
இந்நிலையில் அப்போது ஆல்ட்ரின் அணிந்திருந்த விண்வெளி சட்டை நேற்று ஏலம் விடப்பட்டதில் ரூ. 22.37 கோடிக்கு ஏலம் போனது. ஆல்ட்ரினின் தற்போதைய வயது 92. மற்ற இருவரும் (ஆம்ஸ்டிராங், காலியன்ஸ்) மறைந்து விட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.