15 நிறுவனங்களுக்கு குட்டு வைத்த CCPA..மத்திய அரசின் நிபந்தனையால் அதிரடி நடவடிக்கை.. ஏன்?

கடந்த ஜூன் மாதம் நுகர்வோர் ஏமாறுவதை தடுக்க தவறான விளம்பரங்களுக்கு தடை செய்வதற்கான வழிகாட்டுதல் நெறி முறைகளை அரசாங்கம் வெளியிட்டது.

இது நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட நிலையில், விதிகளை மீறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க முடியும் என்றும் அறிவிக்கபட்டது.

மேலும் தொடர்ந்து விதிகளை மீறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் வகையிலும் இந்த விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

MSME நிறுவனங்களுக்கு 2 கோடி வரை எளிய கடன்.. மத்திய அரசின் 4 அசத்தலான திட்டங்கள்..!

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

தவறான விளம்பரங்களைத் தடுத்தல் மற்றும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்களுக்கான ஒப்புதல்கள் 2022 என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகள், விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து விளம்பரங்களை வெளியிடுவதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

15 நிறுவனங்களுக்கு தடை

15 நிறுவனங்களுக்கு தடை

இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிடப்பட்ட நிலையில் (CCPA), தவறாக கண்டறிந்ததையடுத்து 15 நிறுவனங்கள் விளம்பரங்களை வாபஸ் பெற்றதாக சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி காரே தெரிவித்துள்ளார்.

என்னென்ன நிறுவனங்கள்?
 

என்னென்ன நிறுவனங்கள்?

சியாரம் சில்க்ஸ், லைஃப்பாய், கென்ட் ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், புளூ ஸ்டார், சோடியாக், சஃபல் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் மெயின்டன்ஸ் சர்வீசஸ், பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட், , ப்ளு ஸ்டார் லிமிடெட், ஏஎம் வெப்ஷாப் இந்தியா பிரைவேட் லிமிடெட், நாப்டோல், ஷ்யூர் விஷன் இந்தியா, சென்சோடைன் மற்றும் பன்வர் ரத்தோர் டிசைர் ஸ்டுடியோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.

இவ்வளவு பிரச்சனைகளா?

இவ்வளவு பிரச்சனைகளா?

CCPA இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரையில் 129 பிரச்சனைகளை கண்டறிந்துள்ளது. இதில் 71 முறைகேடு செய்ததாகவும், 49 நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காகவும், 9 நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

15 companies withdraw misleading ads: CCPA

15 companies withdraw misleading ads: CCPA/15 நிறுவனங்களுக்கு குட்டு வைத்த CCPA..மத்திய அரசின் நிபந்தனையால் அதிரடி நடவடிக்கை.. ஏன்?

Story first published: Thursday, July 28, 2022, 13:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.