இந்தியாவின் டாப் 10 பணக்கார பெண்கள் யார் யார் தெரியுமா?

இந்தியாவில் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது பல பெண்கள் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை எடுத்தால் அதில் பலர் பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 10 பணக்கார பெண்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

சீனா-வை நெருங்கும் இந்தியா.. 2 மடங்கு வளர்ச்சி..!

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர்

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர்

மல்ஹோத்ரா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி. இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் மல்ஹோத்ரா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபால்குனி நாயர் குடும்ப நிறுவனர் மற்றும் நைகாவின் தலைமை நிர்வாக அதிகாரி

ஃபால்குனி நாயர் குடும்ப நிறுவனர் மற்றும் நைகாவின் தலைமை நிர்வாக அதிகாரி

ஃபால்குனி நாயர் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.57,520 கோடி ஆகும். ஃபால்குனி நாயர் இந்தியாவின் பணக்கார பெண்மணி மற்றும் உலகின் பத்தாவது பணக்கார பெண்மணி ஆவார். 2021ஆம் ஆண்டு இவரது நிறுவனம் Nykaa பொதுவில் வந்த பிறகு, அவரது சொத்து ஒரு வருட காலப்பகுதியில் 963 சதவீதம் அதிகரித்துள்ளது.

பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா
 

பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா

கிரண் மசூம்தார் ஷா அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29,030 கோடி. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான இவர் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்கான வழிகளை வகுத்து வருகிறார்.

நிலிமா மோடபார்ட்டி டிவிஸ் ஆய்வகத்தின் இயக்குனர்

நிலிமா மோடபார்ட்டி டிவிஸ் ஆய்வகத்தின் இயக்குனர்

நிலிமா மோடபார்ட்டி அவர்களின் சொத்து மதிப்பு ரூ.28,180 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளாக, டிவிஸ் ஆய்வகத்தின் இயக்குநராக, திவியின் ஆய்வகங்களின் பொருள் ஆதாரம் மற்றும் கொள்முதல், கார்ப்பரேட் நிதி மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் அனைத்து கூறுகளையும் இவர் தான் மேற்பார்வையிட்டு வருகிறார். இதனால் ஒரே ஆண்டில் இவரது சொத்துமதிபு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

ஜோஹோவின் இணை நிறுவனர் ராதா வேம்பு

ஜோஹோவின் இணை நிறுவனர் ராதா வேம்பு

ராதா வேம்பு அவர்களின் சொத்துமதிப்பு ரூ.26,260 கோடி. வேம்பு தனது சகோதரர் ஸ்ரீதர் வேம்புவுடன் இணைந்து டெக் நிறுவனத்தை நிறுவி, 2007 ஆம் ஆண்டு முதல் அதை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். சென்னையைச் சேர்ந்த ஜோஹோவின் சொத்துமதிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 127 சதவீதம் உயர்ந்துள்ளது.

யுஎஸ்வியின் தலைவர் லீனா காந்தி திவாரி

யுஎஸ்வியின் தலைவர் லீனா காந்தி திவாரி

லீனா காந்தி திவாரி அவர்களின் சொத்துமதிப்பு ரூ.24,280 கோடி. தொழிலதிபரும் எழுத்தாளருமான திவாரி பணக்கார பட்டியலில் இருந்தாலும் தொண்டு செய்யும் பெண்மணியாக கருதப்படுகிறார். அவர் சுகாதாரத் துறைக்கு ரூ.24 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனு ஆகா, தெர்மாக்ஸின் இயக்குனர் மெஹர் புதும்ஜி

அனு ஆகா, தெர்மாக்ஸின் இயக்குனர் மெஹர் புதும்ஜி

தாய் அனு ஆகா, மகள் மெஹர் புதும்ஜி ஆகியோர்களின் சொத்துமதிப்பு ரூ.14,530 கோடி. அனுவின் மகள் மெஹர் கடந்த 2003ஆம் ஆண்டில் தெர்மாக்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் 2018ஆம் ஆண்டு நிறுவனத்தின் குழுவிலிருந்து அனு விலகிய பிறகு நிறுவனத்தை திறம்பட வழிநடத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் தாய்-மகள் இருவரின் செல்வம் கிட்டத்தட்ட 148 சதவிகிதம் அதிகரித்தது.

நேஹா நர்கெடே இணை நிறுவனர் கன்ஃப்ளூயண்ட்

நேஹா நர்கெடே இணை நிறுவனர் கன்ஃப்ளூயண்ட்

நேஹா நர்கெடே அவர்களின் சொத்துமதிப்பு ரூ.13,380 கோடி. பணக்கார பெண்கள் பட்டியலில் நார்கேடே எட்டாவது இடத்தில் உள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கன்ஃப்ளூயண்ட் மதிப்பீடு NASDAQ இல் 25% உயர்ந்து ரூ.84,930 கோடியாக இருந்தது.

டாக்டர் லால் பாத்லேப்ஸின் இயக்குனர் வந்தனா லால்

டாக்டர் லால் பாத்லேப்ஸின் இயக்குனர் வந்தனா லால்

வந்தனா லால் அவர்களின் சொத்துமதிப்பு ரூ.6,810 கோடி. டாப் டென் லிஸ்டில் புதிதாக நுழைந்தவர். இவர் டாக்டர் லால் பாத்லேப்ஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் உள்ளார். லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் நோயியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு 1983 இல் நிறுவனத்தில் சேர்ந்தார்.

ரேணு முன்ஜால் ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் எம்.டி

ரேணு முன்ஜால் ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் எம்.டி

ரேணு முன்ஜால் அவர்களின் சொத்துமதிப்பு ரூ.6,620 கோடி. மறைந்த ராமன் முன்ஜாலின் மனைவி, அவர் தற்போது ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இவர் பல்வேறு மனிதாபிமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அசத்தும் ஈரோடு தம்பதி.. ஆட்டுபால் மூலம் சோப்பு.. இன்னும் பல ஸ்கின் கேர்.. லட்சக்கணக்கில் வருமானம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 wealthiest self made women in India; HCL Roshni Nadar tops the list

Meet the top 10 wealthiest women in India | இந்தியாவின் 10 பணக்கார பெண்மணிகள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.