கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை!

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில்பதையாக மாற்றியும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே துறை சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
கீழே உள்ள வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அங்கும் இங்குமாக நள்ளிரவிலும் அலைபோதும் காட்சிகள் .. இந்த காட்சிகள் அரங்கேறும் இடம் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், தென்மாவட்ட பேருந்துகள் பெரும்பாலும் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல ரயில்கள் இல்லாததால், பேருந்துக்காக மக்கள் அல்லல்படுவது வாடிக்கையாக உள்ளது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/aGw-uLYZ_BE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
கோவையில் லட்சக்கணக்கான தென்மாவட்ட மக்கள் வசிக்கும்நிலையில், மீட்டர் கேஜாக இருந்தபோது இயக்கப்பட்ட 8 ரயில்கள், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் மீண்டும் இயக்கப்படவில்லை. அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் கோவையில் இருந்து கோவை – பொள்ளாச்சி , கோவை – பழனி ஆகிய இரண்டு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல பொள்ளாச்சி திண்டுக்கல் வழித்தடமே மிகவும் எளிதான வழித்தடமாக இருக்கிறது. 3.30 முதல் 4 மணி நேரத்தில் மதுரையை அடைய முடியும் என்பதால் ,கோவை, திருப்பூர், நீலகிரி, மற்றும் கேரளமாநிலம் பாலக்காட்டில் வசிக்கும் மக்களுக்கும் , சரக்கு போக்குவரத்துக்கும் இவ்வழித்தட ரயில்கள் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
FAST TRACK COIMBATORE RAILWAY STATION (Tamil Nadu) - Lodge Reviews & Photos  - Tripadvisor
கல்வி , தொழில் , விவசாயம் சார்ந்து மட்டுமல்லாமல் விவசாய பொருட்கள் , மளிகை பொருட்கள் , தொழிற்சாலை உதிரிபாகங்கள் , உற்பத்தியாகும் பொருட்கள் என பலவும் தென்மாவட்டங்களுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் இணைக்கும் சரக்கு முனையமாகவும் கோவை ரயில் நிலையம் மாறும் வாய்ப்புள்ளது.
மக்கள் வைக்கும் கோரிக்கைகள்:
1. திருச்செந்தூர் ரயிலை பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு மற்றும் கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு மாற்ற வேண்டும்
2. பழனி வழியாக மதுரை – கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
3. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை மற்றும் பழனி வழியாக கோவை செல்லும் விரைவு ரயிலை அமல்படுத்த வேண்டும்

4. திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக கோவைக்கு அதிகாலையில் புறப்படும் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் அறிவிக்க வேண்டும்
5. நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை வாராந்திர ரயிலை முறைப்படுத்த வேண்டும் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.