"அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை; காலை பள்ளி, மாலை டெலிவரி வேலை" – வைரலான 7 வயது சிறுவனின் வீடியோ

சமூக வலைதளம் சாமானிய மனிதர்களின் இன்ஸ்பிரேஷன் கதைகளை நம் கண்முன் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன. அவை எப்போதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும். அந்தவகையில் தற்போது 7 வயது சிறுவனின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், zomato-வில் டெலிவரி பாயாக 7வயது சிறுவன் ஒருவன் சாக்கலேட்களை கையில் ஏந்தியபடி தனது வாழ்க்கைச் சூழலைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

அச்சிறுவனின் தந்தை zomato -வில் டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட சிறிய விபத்தின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். எனவே அச்சிறுவன் தந்தைக்கு பதிலாக உணவுகளை டெலிவரி செய்வதாக கூறுகிறார். காலை பள்ளிக்குச் செல்லும் அச்சிறுவன் பாடங்களைப் படித்துவிட்டு, மாலை 6 மணி முதல் 11 மணிவரை சைக்கிளில் சென்று உணவுகளை டெலிவரி செய்து வருகிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்துப் பலரும் சிறுவனின் படிப்புக்கும், அவரின் தந்தைக்கு மருத்துவ உதவிகள் செய்து தருவதாகக் கூறிவருகின்றனர்.

மேலும், 7வயது சிறுவன் இவ்வாறு வேலை செய்வது குழத்தைத் தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது என்று சிலர் பதிவிட்டு வந்தனர். இதை அறிந்த zomato நிறுவனம் அவரது தந்தையின் ஐடி-யை தற்காலிமாகத் தடைசெய்து வைத்திருப்பதாகவும் அவர் குணமடைந்த பிறகு மீண்டும் பணிபுரிய அனுமதிக்கும் என்றும் அதுவரை அவருக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துவருவதாகவும் சொல்கிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.