Tamil News Live Update: மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது. மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய நீதிபதி நியமனம்

தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்து, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டார்.

செஸ் ஒலிம்பியாட் 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி, தமிழக வீரர் குகேஷ் 7வது முறையாக வெற்றி  பெற்றார். இந்திய ஓபன் பிரிவு ‘சி’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பர்மிங்காம் காமன்வெல்த் 2022

பர்மிங்காம் காமன்வெல்த்  மல்யுத்த போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ ஃப்ரிஸ்டைல் பிரிவில் கனடா வீரர் மெக்நீலை வீழ்த்தி, இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். மல்யுத்த போட்டியில் பெண்கள் பிரிவில்  வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா தங்கம் வென்றனர்.

பர்மிங்காம் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 9 தங்கம், 9 வெண்கலம், 8 வெள்ளி என மொத்தம் 26 பதக்கங்களுடன்  5வது இடத்திற்கு முன்னேறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
13:43 (IST) 6 Aug 2022
மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

ஆக.8ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தேசிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு அறிவிப்பு

13:39 (IST) 6 Aug 2022
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் – ஸ்டாலின் வாழ்த்து!

U20 சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள தமிழக வீரர் செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12:38 (IST) 6 Aug 2022
பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்!

சென்னை: மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் முதற்கட்டமாக 60 பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

12:29 (IST) 6 Aug 2022
நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்!

படப்பிடிப்பில் கலந்து கொள்ளவதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.

12:29 (IST) 6 Aug 2022
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்!

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11:48 (IST) 6 Aug 2022
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வுதியம் உயர்வு

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வுதியத்தை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

11:47 (IST) 6 Aug 2022
கர்நாடக முதல்வருக்கு கொரோனா

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.

10:24 (IST) 6 Aug 2022
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர். முதல் நபராக பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்தினார்.

10:04 (IST) 6 Aug 2022
இந்தியாவில் மேலும் 19,406 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 49 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 1.34 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09:24 (IST) 6 Aug 2022
மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு

மூணாறு அருகே புதுக்குடி தோட்டம் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு கோவில், 2 கடைகள் மண்ணில் புதைந்தன. ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை.

08:51 (IST) 6 Aug 2022
மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1.77 லட்சம் கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் – 120.04 அடி, நீர் இருப்பு – 93,534 டிஎம்சியாக உள்ளது.

08:10 (IST) 6 Aug 2022
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம் கடற்பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.

08:10 (IST) 6 Aug 2022
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

08:09 (IST) 6 Aug 2022
இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமது தரப்பையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

08:09 (IST) 6 Aug 2022
துணை குடியரசு தலைவர் தேர்தல்

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.