நடுத்தர மக்களை விடாமல் துரத்தும் கடன் செயலிகள்.. புதிய ஐடியா.. மக்களே உஷார்..!

இந்தியாவில் கடன் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள வருகிறது

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் நேரடியாக ஆய்வு செய்யத் திட்டமிட்டு இருக்கும் இந்த நிலையில் மக்களிடம் பணத்தை அட்டையைப் போல் உரிஞ்சும் மோசடி செய்யும் லோன் ஆப்-கள் தற்போது புதிய ஐடியா உடன் சந்தையில் இறங்கியுள்ளது.

மேலும் மோசடி கடன் செயலிகளுக்கு எதிராகவும், அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் மீது இந்தியா, நேபாள் ஆக்கியவற்றில் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. இந்த வேளையில் புதிய உக்தி உடன் கடன் செயலிகள் இறங்கியுள்ளதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடன் செயலிகளுக்குச் செக்.. நிர்மலா சீதாராமன் அதிரடி முடிவு..!

கடன் செயலிகள்

கடன் செயலிகள்

இந்தியாவில் பல செயலிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும், சைபர் காவல் துறையினரிடமும் மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்களில் சிக்கியுள்ள வேளையில் மோசடி செய்வே உருவான கடன் செயலிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்க மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளனர்.

கூகுள் ப்ளே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

கூகுள் ப்ளே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

இந்தியாவில் செயல்படும் கடன் செயலிகள் கூகுள் ப்ளே-வில் தனது நிறுவனத்தின் பெயர், செயலியின் பெயரை மாற்றியுள்ளது. இதேபோல் புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காகத் தற்போது புதிதாகப் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், குறிப்பாக social media influencers எனக் கூறப்படும் திடீர் பிரபலங்களின் வாயிலாகவும் விளம்பரம் செய்து வருகிறது.

சீனா
 

சீனா

இந்தக் கடன் செயலிகள் பெரும்பாலானவை சீனா நிறுவனங்கள் மற்றும் சீனர்கள் துணையுடன் நடந்து வருவதாகத் தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் அதிர்ச்சி அளிக்கும் வேளையில் மறுபுறம் கடன் வாங்கியவர்களை இந்தக் கடன் செயலிகளைச் சித்ரவதை செய்து வருகிறது.

Rupee Tiger செயலி

Rupee Tiger செயலி

மும்பை-யை சேர்ந்த Bhayandar பகுதியில் இருக்கும் 34 வயதான நபர் சைபர் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் ஜூலை 30ஆம் தேதி இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ வாயிலாக வந்த Rupee Tiger என்ற செயலியை டவுன்லோடு செய்துள்ளார். ஆனால் கடன் பெற அப்ளை செய்யவில்லை.

ரூ.1600 கடனுக்கு 3000 ரூபாய்

ரூ.1600 கடனுக்கு 3000 ரூபாய்

ஆனாலும் 34 வயது நபருக்கு கடன் தொகையாக 1600 ரூபாய் வந்துள்ளது, அடுத்தச் சில நாட்களில் 3000 ரூபாய் செலுத்த வாட்ஸ்அப்-ல் மெசேஜ் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடன் வாங்கிய நபரின் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தொடர்புகளுக்கும் morphed photo அனுப்பப்படும் என மிரட்டல் வந்துள்ளது.

மனைவி, மகள், மகன் போன் நம்பர்

மனைவி, மகள், மகன் போன் நம்பர்

தனது காடெக்ட்-ல் இருக்கும் தொடர்புகளை உண்மையில் அந்தக் கடன் செயலியின் ஏஜெண்ட் வைத்துள்ளாரா என்பதை நிருபிக்க 34 வயது நபர் கேட்க, அந்த ஏஜென்ட் அவரது பான் எண் மற்றும் ஆதார் எண் தவிர அவரது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரின் மொபைல் எண்-ஐ பகிர்ந்துள்ளார். உடனே பயந்து போய் 3000 ரூபாய்ச் செலுத்தியுள்ளார்.

மீண்டும் கடன்

மீண்டும் கடன்

பிரச்சனை முடிந்தது என நினைத்த அவருக்கு மீண்டும் 1600 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு மீண்டும் 3000 ரூபாய் கேட்கவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் தற்போது மோசடி கடன் செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமும் வருகின்றனர் என்பதைக் காவல் துறை மக்களுக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளது.

போலி கடன் செயலிகள்

போலி கடன் செயலிகள்

சைபர் நிபுணர் ஸ்வப்னில் பாட்டீல் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 200க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளைக் கூகுள் உதவியுடன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Loan Apps Moved from apps to facebook, instagram; Loan app fraud peaks in India

Loan Apps Moved from apps to facebook, instagram; Loan app fraud peaks in India நடுத்தர மக்களை விடாமல் துரத்தும் கடன் செயலிகள்.. புதிய ஐடியா.. மக்களே உஷார்..!

Story first published: Monday, August 8, 2022, 13:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.