சொகுசாக வாழ ஆசைப்பட்டு கம்பி எண்ணும் காதல் ஜோடி.!

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்த பெரியராயப்பன் (வயது 80) என்ற முதியவரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, முதியவரிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளனர்.

முதியவர் உள்ளே தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் உள்ளே நுழைந்த ஜோடி, முதியவரின் கைகளை பிடித்து அவரை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டி வீட்டில் இருந்த பீரோ பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை என்பதால் மற்ற இடங்களில் நகை பணத்தை தேடினர்.

பிறகு அங்கு ஒரு பையில் இருந்த பணத்தை எடுத்து வெளியே தப்பி செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் வெளியூரில் இருந்து மகனும், மருமகளும் வீட்டிற்கு வர முதியவர் கட்டிப்போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கட்டை அவிழ்த்துவிட்ட போது தப்பி செல்லும் ஜோடியை பற்றி முதியவர் தெரிவித்துள்ளார். சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தப்ப முயன்ற ஜோடியை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்ததால், இளைஞர் தானாக முன்வந்து சரணடைந்தார்.

இருவரையும் காவல்துறையில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் விருதுநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், அவருடன் வந்த பெண் திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி என்பதும் தெரியவந்தது.

இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது. அதோடு இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் வீட்டில் யாரும் இல்லாத முதியவரை நோட்டமிட்டு அவர்களை கட்டிப்போட்டு பணம் பறித்து வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.