ஆயுதம், ரத்தம், அகிம்சை… இந்திய சினிமாவில் சுதந்திர போராட்ட திரைப்படங்கள்! #VisualStory

சினிமா

சுதந்திரத்தின் போது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை, தலைவர்களின் தியாகங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவை திரைப்படங்கள். சுதந்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் வரிசை இதோ…

கட்டபொம்மன்

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வரி செலுத்த மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறே இப்படம். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவாஜி நடித்திருப்பார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை நிறுவி இயக்கியதால், கைது செய்யப்பட்டு கடுமையான சிறை தண்டனைகள் அனுபவித்த செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் வரலாறே இப்படம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சுதந்திர போராட்ட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ரிச்சர்ட் ஆட்டன்பரோவால் இயக்கப்பட்ட இப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

இந்தியன்

ஊழலை ஒழிக்கப் போராடும் ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் கதையாக இப்படம் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா நடித்திருப்பர்.

சிறைச்சாலை

அந்தமான் சிறையில் சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய கொடூரங்களை காட்டும் திரைப்படம். இப்படத்தில் மோகன்லால் நடித்திருப்பார்.

தன்னுடைய எழுத்துகளின் மூலம் சுதந்திர வேள்வியை மக்களிடையே ஊட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாறே இப்படம்.

ஹே ராம்

காந்தியின் கொள்கை தான் தன்னுடைய மனைவி இறக்க காரணம் என காந்தியை கொல்ல நினைப்பவர், இறுதியில் காந்தியின் மகிமைகளை அறிந்து ஏற்றுக் கொள்வதே கதைக்களம். கமல் ஹாசன் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களிக் ஷாருக்கான், ராணி முகர்ஜி நடித்துள்ளனர்.

லகான்

பிரித்தானிய அரசாங்கம் வரியை குறைக்க அவர்களுடன் மட்டைப்பந்து ஆடும்படி வலியுறுத்த, புவன் எனும் கிராமவாசி தன்னுடைய மக்களுக்கு பயிற்சி அளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள்பெறுகிறார் என்பதே கதைக்களம்.

தன்னுடைய இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்த மாவீரன் பகத் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரைப்படம்.

‘மதராசபட்டினம்’

காதல் கதையை மையப்படுத்தி கதை இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மக்கள் இருந்த நிலை, போராட்டங்கள், போராட்டத்திற்கு பிறகு என்ன நடந்தது போன்ற தகவல்களை காட்டிய படம். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்கிய காரணமான கவர்னரை, உத்தம் சிங் லண்டன் சென்று 15 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக் கொன்ற கதை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.