'கசப்பான அனுபவம்'… செருப்பு வீச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ரியாக்ஷன்

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிசூட்டில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை முன்னிட்டு அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர்.

அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னர் தான், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறப்படும் நிலையில், ஆத்திரம் அடைந்த பாஜகவினர், அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்ட போது, அவரது காரின் மீது செருப்பை வீசி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் சாலை மறியல் செய்தனர். இந்தச்சம்பவம் குறித்து தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார் அந்த பதிவில்,

காலணியை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும், எனது ஊழியர்கள் காலணியை பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவதாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பி எழுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், இச்சம்பவமானது விரும்பத்தகாத ஒன்று… அதுவும் மதுரை மண்ணில் இப்படி நடந்திருக்கக்கூடாது. இது ஒரு கசப்பான அனுபவம்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.