சுதந்திர தினம்: சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விருது!

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமைச்செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இன்று காலை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர்

பல்வேறு துறை சார்ந்த நபர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.

அதில் சிறந்த மாநகராட்சியாக சேலம், சிறந்த நகராட்சியாக 1.ஸ்ரீவில்லிபுத்தூர், 2. குடியாத்தம், 3.தென்காசி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு அந்த நகராட்சி ஆணையர்கள், தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அந்த வகையில், சிறந்த பேரூராட்சிக்கான விருது, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் பெற்றுக்கொண்டார். சிறந்த பேரூராட்சிக்கான 2-வது விருது கன்னியாகுமரி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. அந்த பேரூராட்சியின் தலைவர் தசரதன் ரூ.5 லட்சத்திற்கான காசோலனை மற்றும் பரிசை பெற்றுக்கொண்டார்.

சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாவது விருது மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. ரூ.3 லட்சத்திற்கான காசோலை மற்றும் விருதினை சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், தலைவர் ஜெயராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.