படப்பிடிப்பில் விபத்து – நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக நடிக்கிறவர் நாசர். இவரது நடிப்பு பல படங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக தேவர்மகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட ஏராளமான படங்களில் தான் எவ்வளவு பெரிய தேர்ந்த நடிகர் என்பதை நாசர் உணர்த்தியிருப்பார். வில்லன் ரோல் கிடைத்தாலும், குணச்சித்திர வேடம் கிடைத்தாலும் தன் பணியை செம்மையாக செய்பவர் நாசர். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து ‘வாய்தா’ படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார்.நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் நாசர் இருக்கிறார். 

இந்தச் சூழலில் தனது உடல்நிலை காரணமாக நாசர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது அந்தத் தகவலை நாசர் மறுத்தார். இதுதொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், “நான் நடிகனாகத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.மேலும், வலைதளங்களில் சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன்.

எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம். என் மூச்சு இருக்கும் வரை நான் தொடர்ந்து நடித்துக்கொண்டேதான் இருப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடிகை சுஹாசினி, ஹீரோயின், மெஹ்ரீன், சியாஜி ஷிண்டே ஆகியோருடன் படப்பிடிபில் இருந்தார் நாசர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நாசர் காயமடைந்தார். இதனையடுத்து நாசர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.