இந்தியாவின் புதிய ‘EMS HUB’ ஆக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

சீனா-வின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான பணப் பலத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தி துறை தான்.

அதிலும் முக்கியமாக இன்றைய வாழ்க்கை முறையில் மக்களின் தினசரி வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு தான் சீனாவின் வேகமான வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது.

இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் முக்கிய உற்பத்தி தளமாக மாறி வருகிறது நம்முடைய தமிழ்நாடு.

இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்திய அளவில் தமிழ்நாடு மாநிலம் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளுக்கான (இஎம்எஸ்) முக்கிய Hub ஆக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கொள்கையில் முக்கியப் பிரிவாக இந்தத் துறையை அங்கீகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

EMS நிறுவனங்கள்

EMS நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் பல EMS நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் உள்நாட்டு உற்பத்திக்காகத் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. இதனால் விரைவில் தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மட்டும் அல்லாமல் துறை பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

தமிழ்நாடு ஆதிக்கம்
 

தமிழ்நாடு ஆதிக்கம்

இந்தப் பிரிவில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துவதின் அடையாளமாக, சென்னையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஐபிஓ மூலம் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறது. பாரத் எஃப்ஐஎச் (ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் நிறுவனம்) சுமார் 5,003.8 கோடி ரூபாயை ஐபிஓ மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதேபோல் Avalon டெக்னாலஜிஸ் 1,025 கோடி ரூபாயும், Sryma SGS டெக்னாலஜி 825 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு வருகிறது.

சீனா

சீனா

இந்தியாவில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்ட முக்கியக் காரணம், அமெரிக்காவின் நெருக்கடியால் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்த நிறுவனங்களை ஈர்க்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளைக் கொடுத்தது.

 PLI திட்டம்

PLI திட்டம்

இதில் முக்கியமாக PLI திட்டத்திற்கு அடுத்த 5 வருடத்திற்குச் சுமார் 300 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டது, இதன் அளவு 520 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்கள் PLI திட்டத்தில் தேர்வாகும் பட்சத்தில் 5 சதவீத தொகையை ஊக்கத்தொகையைாக அளிக்கப்பட உள்ளது. இதில் ஈர்க்கப்பட்டுப் பல நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க முன்வந்தது.

மாற்று உற்பத்தி தளம்

மாற்று உற்பத்தி தளம்

China+1 strategy படி இந்தியா, உலகளவிலான நிறுவனங்களுக்குச் சீனா-வை விடுத்து மாற்று உற்பத்தி தளமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று நிர்ணயம் செய்து மத்திய அரசு பல துறைக்கு PLI திட்டத்தை உருவாக்கியது.

101 பில்லியன் டாலர் சந்தை

101 பில்லியன் டாலர் சந்தை

Frost & Sullivan ஆய்வுகளின் பசி இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவை துறை மதிப்பு 2022 ஆம் நிதியாண்டில் 45 பில்லியன் டாலராக இருந்தது, 2026ஆம் நிதியாண்டில் இது 101 பில்லியன் டாலராக இருக்கும். இது EMS துறையின் CAGR அளவு 22.1 சதவீதம்.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இதற்கிடையில் தமிழ்நாட்டின் முந்தைய அரசும் சரி, தற்போதைய அரசும் சரி வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்தது. இதன் பலனாகப் பெரிதும் சிறிதுமாகப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் தலைமையிலான அரசு புதிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க கொள்கை அளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TamilNadu become major hub electronic manufacturing in India

TamilNadu become major hub electronic manufacturing in India இந்தியாவின் புதிய சக்தியாக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.