பிரத்யேக ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நீலகிரி மலை ரயில்

ஊட்டி: மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரியில் உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றது. ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில், தனித்துவமான ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நாட்டிலேயே முதல் மலை ரயில் ஆகும் என்று தென்னக ரயில்வே பெருமையுடன் டிவிட்டர் பதிவிட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரையிலான செங்குத்தான சாய்வுகளை கடக்க  இந்த பொறிமுறை உதவுகிறது என்று கூறும் தென்னக ரயில்வேயின் டிவிட்டர் பதிவு, ரேக் & பினியன் பொறிமுறையானது, கல்லார் என்ற இடத்திற்குப் பிறகு தொடங்கி குன்னூர் ரயில் நிலையம் வரை பயன்படுத்தப்படுகிறது.

ரேக் மற்றும் பினியன் ஸ்டீயரிங் பொறிமுறை மூலம் சக்கரங்களைத் திருப்புவது எளிது. ஸ்டீயரிங் வீலின் வட்ட இயக்கத்தை சக்கரங்களைத் திருப்புவதற்குத் தேவையான நேரியல் இயக்கமாக மாற்றுவதற்கு ஒரு கியர்-செட் இந்த பொறிமுறையில் பயன்படுத்தப்படுகிறது. இது கியர் குறைப்பையும் வழங்குகிறது, எனவே சக்கரங்களைத் திருப்புவது எளிது.

மலைகளில் உள்ள பாறைகள், மேடு பள்ளங்கள், வளைவுகள், சீரற்ற பரப்பு என பல்வேறு விதமான இயற்கை வழித்தடங்களில் செம்மையாக உருவாக்கப்பட்டுள்ள இருப்புப்பாதையில் இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது. எனவே, இதற்கு மேம்பட்ட மற்றும் வித்தியாசமான இயக்கப் பொறிமுறை தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகரி மலையில்  இந்த ரயிலில் பயணிக்கும்போது, இயற்கை எழில் காட்சிகளை கண்டு களிக்கலாம்.

இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35க்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது

கோடை காலத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களிக்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, 2-ம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, 2-ம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என இந்த ரயிலில் அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.