”மின்சாரக் கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும்” :  போலி குறுச் செய்தி மூலம் பல லட்சம் மோசடி

சென்னை காவல்துறையினருக்கு 50 மேற்பட்ட மின்சார கட்டணம் தொடர்பான மோசடி புகார்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக போலி குறுச் செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்ற விழுப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் மின்சாரம் தொடர்பான போலி மோசடி புகார்கள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள அடையார் காவல்நிலையத்தில் 23 புகார்களும், தி.நகரில் 12 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் சில லட்சகள் வரை மோசடியில் இழந்துள்ளனர்.

சிலருக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் குறிப்பிட்ட தொகையை மீட்டும் கொடுத்துள்ளனர். இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்திதேவி கூறுகையில் “ இரவு 10 மணிக்குள் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுச் செய்தி அனுப்பப்படுகிறது. வீட்டில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவார்கள் என்ற அச்சத்தில் பொதுமக்களும் குறுச் செய்தி அனுப்பிகிறவர்களை தொடர்ப்பு கொள்கின்றனர். அப்போது டீம் வீவர் அல்லது ஆர்க்யூ டியூபில் போன்ற செயலிகளை பதிவிறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் மோசடி செய்பவர்கள். இதன்மூலம் சமந்தபட்டவரின் செல்போன்களின் எட்டுமொத்த கட்டுபாட்டையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வங்கி கணக்கிளிருந்து பணம் எடுக்கிறார்கள்.

சமீபத்தில் 8.89 லட்சம் வரை ஒரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது. சமந்தப்பட்ட நபர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டார்.  ராஜஸ்தானில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் கால் செய்த சிம் கார்டு வேறு யாருடைய பெயர் மற்றும் முகவரியில் வாங்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கி தொடர்பான தகவல்களை பதிவு செய்யும்போது சரியாக பொருந்தவில்லை என்பதால் பணத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை.  

இதுபோலவே வலசரவாக்கத்தில் உள்ள ஒருவருக்கும் நடந்துள்ளது. ஆனால் அவர் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு இது ஒரு மோசடி என்று தெரிந்துகொண்டார். அதனால் இரண்டு நாள்வரை அவர் இன்டர்நெட்டை பயன்படுத்தவில்லை.

இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.