பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு.. ஆனா சாமானிய மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை..!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எரிபொருள் விற்பனையில் அதிகப்படியான வரியை விதித்துப் பெரிய அளவிலான வரி வருமானத்தைப் பார்த்து வரும் நிலையில், தற்போது ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான விண்ட்பால் டாக்ஸ்-ஐ உயர்த்தியுள்ளது.

இந்த வரி மாற்றங்கள் இந்திய ரீடைல் சந்தையில் ரிடைல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? அக்டோபர் 1 முதல் இந்த பென்ஷன் திட்டம் உங்களுக்கு கிடையாது!

 மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 6 மாத சரிவை எட்டியுள்ள வேளையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் பெட்ரோலியம் க்ரூட்-க்கான விண்ட்பால் டாக்ஸ் ஒரு டன்னுக்கு 17,750 ரூபாயில் இருந்து 13000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

 விண்ட்பால் டாக்ஸ்

விண்ட்பால் டாக்ஸ்

ஆனால் டீசல் ஏற்றுமதியில் விண்ட்பால் டாக்ஸ் அளவை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ஏற்றுமதிக்கு 5 ரூபாயாக இருந்த விண்ட்பால் டாக்ஸ் 7 ரூபாயாக உயர்த்தியது. இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசின் விண்ட்பால் டாக்ஸ் விதிப்பில் 3 வது மாற்றமாகும்.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

இதேவேளையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் டாக்ஸ் அளவு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

 பென்ச்மார்க் கச்சா எண்ணெய்

பென்ச்மார்க் கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் பென்ச்மார்க் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100-103 டாலரில் இருந்து 91.51 டாலராகக் குறைந்துள்ளது. மத்திய அரசு விண்ட்பால் டாக்ஸ் போடும் போது முதலில் கச்சா எண்ணெய்-க்கு 23,350 ரூபாயாக விதித்தது. ஜூலை 20 ஆம் தேதி மாற்றத்தில் இதை 17000 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

புதிய வரி

புதிய வரி

மேலும் இப்புதிய வரி மாற்றங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், கச்சா எண்ணெய் மீது சர்வதேசச் சந்தை விலை மாற்றத்திற்கு ஏற்ப விண்ட்பால் டாக்ஸ் குறைக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi govt reduces Windfall Tax to Rs 13,000 per tonne on petroleum crude

Modi govt reduces Windfall Tax to Rs 13,000 per tonne on petroleum crude பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு.. ஆனா சாமானிய மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை..!

Story first published: Friday, August 19, 2022, 10:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.