மீண்டும் பிரபல கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், இப்போது விக்ரம்-ஐ வைத்து கோப்ராவை உருவாக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் விக்ரமுடன் இந்த படத்தில் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் ‘கோப்ரா’வில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் சியான் 61 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாக்கிட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் டிவிட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன் உரையாடிய விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன் எனக் விக்ரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பேசிய விக்ரம் நான் பல கெட்டப்களில் நடித்துள்ளதால், அதை மட்டும் நம்பி படம் பார்க்க வர வேண்டாம். இது அதை மட்டும் சார்ந்து எடுக்கப்படவில்லை என்றும், கோப்ரா எமோஷனல் ட்ராமாவாக இருக்கும், அது அனைத்து ரசிகர்களையும் கவரும் எமதிரும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.