கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை  சேர்ந்தவர் சீதாலட்சுமி. கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சீதாலட்சுமிக்கு  ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 75 ஆயிரம் லோன்  கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்தது.

இதையடுத்து சீதாலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா  வங்கிக்கு சென்று மேலாளரிடம் நோட்டிஸ் குறித்து கேட்டுள்ளனர். முறையாக பதில் அளிக்காததால் வாக்கு வாதம் ஏற்பட்டது. 

பின்னர்  சம்பவத்தையடுத்து வங்கிக்கு வந்த வங்கி பொது மேலாளர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தவறு நடந்திருப்பது உண்மைதான் என கூறி சமாதான முயற்சியில் ஈடுபட்டார். மேலும் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி கூறுகையில், வங்கிக்கு வராத நிலையில் தான் பணம் வாங்கியதாக போலி ஆதார் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். 

இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்தாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்ட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வங்கியின் பொது மேலாளர்  வங்கியில் தவறு நடந்தது உண்மைதான் என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.